Category: Your Kattankudy
-
உத்தர்காண்ட் வெள்ளம்: முஸ்லிம்களின் மஜ்லிஸ் கட்சி சார்பில் ரூ78 லட்சம் நிவாரணம்!
– OIT ஹைதராபாத்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட இந்து யாத்ரீகர்களுக்கு ஆந்திராவின் மஜ்லிஸ் கட்சி சார்பில் ரூ78 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
-
‘தமிழினி விடுதலை’
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி புதனன்று காலை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
-
பிரிட்டன் விசா : புதிய விதிக்கு கடுமையான எதிர்ப்பு
லண்டன்: இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 4500 ஸ்டேர்லிங் பவுண்கள் ”பாண்ட்” பணமாக கட்ட வேண்டும் என்று பிரிட்டனால் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படியான அறிவித்தலை கடந்த வார இறுதியில் பிரிட்டன் அறிவித்திருந்தது.
-
அவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளராக டெரன் லீமன் நியமனம்
மெல்போர்ன்: அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் புதிய பிரதம பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் வீரர் டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த மிக்கி ஆதரை நேற்று திடீரென அப்பதவியிலிருந்து நீக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை புதிய பயிற்றுவிப்பாளராக லீமனை நியமித்துள்ளது.
-
ஐ.சி.சி நடுவர் குழுவிலிருந்து அஸாட் ரவூப், பில்லி பௌடன் நீக்கம்
டுபாய்: சர்வதேசக் கிரிக்கெட் சபையின் எலைற் நடுவர் குழுவிலிருந்து நடுவர்களான அஸாட் ரவூப், பில்லி பௌடன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் பதிலாக இங்கிலாந்தைச் சேர்ந்த றிச்சர்ட் இலிங்வேர்த், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த போல் றெய்ஃபல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
நிதாஉல் கைர் சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் நிதியுதவியுடன் இன்று காத்தான்குடியில் மூன்று பள்ளிவாயலுக்கு அடிக்கல் நடப்பட்டது
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க நிதாஉல் கைர் சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் நிதியுதவியுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை மூன்று பள்ளிவாயலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
-
சரத் பொன்சேகா-சந்திரிகா அரசியல் கூட்டு: அதிரும் கொழும்பு அரசியல்…
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
‘என் வரவைக் கேட்டதும், காத்தான்குடியில் சில அரசியல்வாதிகளுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது!’
– FM. பர்ஹான் கொழும்பு: நான் காத்தான்குடிக்கு வர இருப்பதாக கேள்விப்பட்டதுமே அங்குள்ள சில அரசியல்வாதிகளுக்கு கைகால்கள் உதறல் எடுத்துள்ளதாகவும் இன்னும் சிலருக்கு வயிற்றோட்டம் பிடித்துள்ளதாகவும் கேள்விபட்டு நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
-
திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சின்னத்தோட்டதில்
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் பைசல் நகர் சின்னத்தோட்டத்தில் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றினை பயனுள்ளதாக மாற்றும் நடவடிக்கையின் பொருட்டு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இன்று 26.06.2013 இடம்பெற்றது.
-
இ.போ.ச காத்தான்குடிச் சாலையில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டு பிடிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடி பஸ் டிப்போவில் ஆட்கொல்லி டெங்குநோய் நுளம்பு குடம்பிகள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
பரீட்சைக்கு முன் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை!
கொழும்பு: பொது பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரும் அந்த பரீட்சைகள் நிறைவடையும் வரையிலும் கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சினாலேயே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதுள்ளதுடன் புதிய கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
-
கிழக்கு மாகாண அமைச்சரவை விரைவில் மாற்றம்!- பிள்ளையானுக்கு முக்கிய பதவி?
கொழும்பு: முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை பதவியிலிருந்த அகற்ற வேண்டும்,