Category: Your Kattankudy
-
ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென்னிலங்கை வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு வெலிகமை நகர சபை மண்டபத்தில் வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் வெலிகம அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கத் தலைவருமான எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ளது.
-
உம்ராவுக்கான விசா விநியோகம் ஜுலை 08 இல் நிறைவு: 4 மில்லியன் விசாக்கள் இவ்வாண்டில் விநியோகம்
கொழும்பு: உம்ரா விசா விநியோகிக் கப்படும் கடைசி திகதி எதிர்வரும் ஜுலை 8 (சஹ்பான் 29) என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி சஹ்பான் இறுதி வரை உம்ரா விசாக்களை விநியோகிக்கும் படி அனைத்து சவூதி தூதர கங்களுக்கும் அறிவுறுத் தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒசாமா நுகாலி குறிப்பிட்டார்.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் -தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடல்- இரா.சம்மந்தன்- ரவூப் ஹக்கீம் -பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் -தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை இரவு 7.மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது.
-
இரு உக்ரேன் பிரiஜகளுக்கு 52 வருட சிறைத்தண்டனை போலி கடன் அட்டை மூலம் ஒரு கோடியே 11 இலட்சம் மோசடி
கொழும்பு: போலியாக தயாரிக்கப்பட்ட கடன் அட்டைகள் மூலம் ஒரு கோடியே 11 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இரண்டு உக்ரேன் பிரஜைகளுக்கு தலா 52 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தலா 52 இலட்ச ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பிரீதி பத்மன் சூரசேன நேற்று தீர்ப்பளித்தார்.
-
காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் கூட்ட மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி தவிசாளரின் கவனத்திற்கு…
– விசேட செய்தியாளர் காத்தான்குடி: புதிய காத்தான்குடி அல் அமீன் மஹா வித்தியாலத்திற்கு பின்னால் அமைந்திருக்கும் அல் அமீன் வீதியில் வடிகாண்களின் மேல் போடப்பட்டிருக்கும் கொங்கிரீட் தட்டங்களில் ஒன்று சுமார் 3 மாதங்களாக உடைந்து காணப்படுகின்றது.
-
முப்பது இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கான பிரமாண்ட வரவேற்பு தோரணை-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையில் உருவான தெயட்ட கிருல தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் (30) முப்பது இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கான பிரமாண்ட வரவேற்பு தோரணை அமைக்கப்படவுள்ளது.
-
ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் பிரதிகள் அக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், வியாழக்கிழமை (27) முற்பகல் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
-
கல்முனை மேயர் இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங்கை சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் லண்டன்: பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 23.06.2013) இலண்டன் பயணமான கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலண்டன் கிளையின் தலைவர் எம்.எஸ்.ஹலீமின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
-
றகர் போட்டியில் வீரர்களுக்கிடையில் பலத்த மோதல்: பல வீரர்கள் காயம்
கண்டி: கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற றகர் போட்டியின் போது வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் வீரர்கள் காயமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதோடு மைதானத்துக்குள்ள நுழைந்த பொலிஸார் சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
-
ஆணும் பெண்ணும் அறையில் இருப்பது விபச்சாரமல்ல! யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா
யாழ்ப்பாணம்: பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் தனியாக அறையில் இருப்பதை விபசாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்
-
கரிபியன் முக்கோணத் தொடர்: மீண்டும் பிரகாசிக்கத் தவருமா இலங்கை?
-MJ கொழும்பு: நாளை வெள்ளிக்கிழமை மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகும் முக்கோணத் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகள் பங்கெடுக்கின்றன.