Category: Your Kattankudy
-
ஒள்ளிக்குளம் பாடசாலை அதிபர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி, ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தின் அதிபர் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் என்பவர் நேற்றிரவு இனம்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
விடுதலைப் போராட்டத்தை மறந்து விடுங்கள்: புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை
மட்டக்களப்பு: ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வருமாறு புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதியாக இருந்த ராம், மட்டக்களப்பு வெல்லாவெளியில் இருக்கும் தனது தாயாரைச் சந்திப்பதற்காக அண்மையில் சென்றிருந்தார்.
-
டெங்கு ஒழிப்பு வார சிரமதானம்
– ரைஸ் கிண்ணியா: நாடளாவிய ரீரியில் ஜூலை முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில கிண்ணியா நகரசபை மற்றும் கிண்ணியா பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள டெங்கு ஒழிப்பு வார சிரமதானம் பிரதேச செயலாளர் எம்.கிரிஸ்நேந்திரன் மற்றும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி ஆகியோரின் மேற்பார்வையில் இன்று கிண்ணியா பிரதேச கிராம சேவகர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
முகம்மது பாயிஸ் இஸ்லாஹி அகில் இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்
-பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் அப்துல் றஹ்மான் வீதியில் வசிக்கும் அஷ்-ஷெய்க் அல்-ஹாபிழ் அகமது முஹைத்தீன் முகம்மது பாயிஸ் இஸ்லாஹி அகில் இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டடுள்ளார்.
-
27,000 பட்டதாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம்
கொழும்பு: அரச துறையில் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத 27,000 பட்ட தாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. அபேகோன் தெரிவித்தார்.
-
சவூதி தொழிலாளர்களுக்கு மேலும் கால அவகாசம்
றியாத்: சவூதி அரேபியாவில் முறையான ஆவணங்கள் இன்றி வேலை செய்து கொண்டிருக்கும் , வெளிநாட்டவர்கள், தங்களது குடிவரவு அந்தஸ்தை சட்டபூர்வமாக்கிக்கொள்ள சவூதி அரசு இன்னும் நான்கு மாதங்கள் கால அவகாசம் தந்திருக்கிறது.தங்களது இருப்பிட அந்தஸ்தை சட்டபூர்வமாக்க, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு நவம்பர் மாதம் வரை இந்த காலக்கெடு தரப்படுகிறது.
-
தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் துமிந்த! திடுக்கிடும் சாட்சியம்? திருப்பமா? அழித்தலா?
கொழும்பு: பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துமிந்த சில்வா, தனக்குத் தானே சுட்டுக்கொண்டார் என்று முல்லேரியா ராஹுல வித்தியாலயத்துக்கு அருகில் கூடியிருந்தவர்கள் தெரிவிப்பதை தான் செவிமடுத்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் சுரங்க குமார சாட்சியமளித்தார்.
-
ஜேர்மனின் தலைநகர் பேர்லின் நகரில் கா-குடி தவிசாளர் அஸ்பர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நிலைத்து நிற்கும் அபிவிருத்தி மற்றும் நகர போக்குவரத்து தொடர்பிலான Rio+20 தீர்மானங்களைநடைமுறைப்படுத்துவது பற்றிய உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த மாதம் 18, 19, 20 ம் திகதிகளில் ஜேர்மனின் தலைநகர் பேர்லின் நகரில் நடைபெற்றது.
-
இலவச யூனானி மருத்துவ முகாம் நீர்கொழும்பு பிரதேசத்தில்
– FM. பர்ஹான் இலவச யூனானி மருத்துவ முகாமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு, பெரிய முல்லை அல் – ஹிலால் மத்திய கல்லூரியிலேயே இந்த இலவச யூனானி மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.
-
அட்டாளைச்சேனை திண்மக்கழிவு முகாமைத்துவம்: தவிசாளர் எம்.ஏ. அன்ஸில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்
– எம்.ஐ.எம். பைசல் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் திண்மக்கழிவு முகாமைத்துவ கடமைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இரு நியமனதாரர்களை இடைநிறுத்துமாறு பணிக்கப்பட்ட கட்டளையானது, அம்பாரை மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி மன்றங்களின் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை மீண்டும் அடிமட்ட
-
காத்தான்குடியில் அருவடைக்கு தயாரான பேரீத்தம்பழங்களை தனது கையால் பறித்து சுவைத்த அமைச்சர் டக்ளஸ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்இபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான
-
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் பட்டதாரிப் பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட மட்டு-மாவட்ட தமிழ்-முஸ்லிம் பட்டதாரிப் பயிலுனர்களை அமைச்சர் டக்கஸ் தேவானந்தா சந்தித்து பேச்சு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பட்டதாரிப் பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட