மட்டக்களப்பு: பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பட்டதாரிப் பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட தமிழ் -முஸ்லிம் பட்டதாரிப் பயிலுனர்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்கஸ் தேவானந்தா செய்வாய்க்கிழமை இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது பட்டதாரிப் பயிலுனர்கள் தமது பிரச்சினை தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினர் அத்தோடு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்கான் செயற் திட்டங்கள் மற்றும் பட்டதாரிப் பயிலுனர்களின் கடமைகள் தொடர்பாகவும்,அவிபிருத்தி வேளை திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரினால் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்த அமைச்சின் தேசிய இணைப்பாளர் கே.தங்கேஸ்வரி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் , பட்டதாரிப் பயிலுனர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Leave a comment