காத்தான்குடி: மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் அப்துல் றஹ்மான் வீதியில் வசிக்கும் அஷ்-ஷெய்க் அல்-ஹாபிழ் அகமது முஹைத்தீன் முகம்மது பாயிஸ் இஸ்லாஹி அகில் இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டடுள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் அகில் இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இவர் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி, மாதம்பை இஸ்ளாஹிய்யா அறபுக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும் பேராதெனிய பல்கலைக்கழக கலைப் பிரிவு பட்டதாரியும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா தாரியுமாவார்.
தற்போது காத்தான்குடி அல் ஹிறா விதியாலத்தில் ஆசிரியராகவும், காத்தான்குடி ஸீத்திக்கீய்யா மகளிர் அறபுக்கல்லூரி அறபு மொழி விரிவுரையாளராகவும், மட்டு-மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளன செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
இவர் மீராஸாஹிப் அகமது முகைதீன் ,முகம்மது யூசுப் உம்மு குல்தும் ஆகியாரின் புத்திரருமாவார்.


Leave a comment