டெங்கு ஒழிப்பு வார சிரமதானம்

– ரைஸ்

DSC06059கிண்ணியா: நாடளாவிய ரீரியில் ஜூலை முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில கிண்ணியா நகரசபை மற்றும் கிண்ணியா பிரதேச செயலகம் இணைந்து  ஏற்பாடு செய்துள்ள டெங்கு ஒழிப்பு வார சிரமதானம் பிரதேச செயலாளர் எம்.கிரிஸ்நேந்திரன் மற்றும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி ஆகியோரின் மேற்பார்வையில் இன்று கிண்ணியா பிரதேச கிராம சேவகர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள விளையாட்டுக் கழகங்கள் இளைஞர் கழகங்கள் சேர்ந்ததான இளைஞர்கள் பங்குகொள்ளும் இச்சிரமதானம் கிண்ணியா பிரதேச கிராம சேவகர் பிரிவுகளான பெரிய கிண்ணியா, பெரியாற்றுமுனை, சின்னக்கிண்ணியா, குட்டிக்கராச்சி, மாலிந்துறை, ரஹ்மானியா நகர் ஆகிய பிரிவுகளில் இளைஞர்கள் சிரமதான நிகழ்வுகளில் கலந்து கொண்டு செயற்படுத்தி வருகின்றனர்.

இச்சிரமதான நிகழ்வில் அப்பிரதேச கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், மாவட்ட சம்மேளன தலைவர் எம்.பி.எம்.நவ்பான் இவர்களுடன் இளைஞர் சேவை அதிகாரி ஏ.டபில்யு.எம். ஜிப்ரியின் வழிநடத்தலில்; இச்சிரமதானம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC06059

DSC06064

DSC06065

Published by

Leave a comment