இலவச யூனானி மருத்துவ முகாம் நீர்கொழும்பு பிரதேசத்தில்

20130630_094458– FM. பர்ஹான்

இலவச யூனானி மருத்துவ முகாமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு, பெரிய முல்லை அல் – ஹிலால் மத்திய கல்லூரியிலேயே இந்த இலவச யூனானி மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.

யூனானி மருத்துவ மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மருத்துவ முகாமில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.

ஹிஜாமா, நீரழிவு பரிசோதனை, சிறுவர் நல சிகிச்சை, வெண் நோயியல் சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் போன்றவற்றிக்காக இந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

யூனானி மருத்துவ மாணவர் சங்கத்தினால் இது போன்ற இலவச யூனானி மருத்துவ முகாம் வருடாந்தம் ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

20130630_095753

20130630_102851

20130630_131344

Published by

Leave a comment