Category: Your Kattankudy
-
இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை
டுபாய்: இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசப்படாமையடுத்தே மெத்தியூஸிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினால் நோன்பாளிகளுக்கு கஞ்சி சமைத்து வினியோகிக்கப்பட்டது
விசேட நிருபர். காத்தான்குடி: நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க பள்ளிவாயல் ஊடாக கஞ்சி காய்ச்சிகொடுப்பது முன்னோர்களின் மிக சிறந்த வழிமுறையாகும். அந்த வகையில் புதியகாத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் புதிய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இம்முறை சுமார் 1100 குடும்பங்களுக்கு புனித ரமழான் மாதநோன்பு திறப்பதற்காக கஞ்சி வினியோகிக்கப்பட்டது.
-
அறிமுகப் போட்டியில் உலக சாதனை படைத்தார் ஆஷ்டன் ஏகார்!
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 98 ஓட்டங்களை எடுத்த அவுஸ்திரேலியாவின் ஆஷ்டன் ஏகார் சாதனை படைத்துள்ளார். இவர் 11வது வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.
-
ஒஸாமாவின் அந்த இறுதி இராத்திரி….
டோஹா: பின்லேடன் கொல்லப்பட்ட பின்னரும், விடை தெரியாத பல கேள்விகளும் மர்மங்களும் உள்ள நிலையில், நேற்று லீக் செய்யப்பட்ட ஒரு ரிப்போர்ட்டில் சில விஷயங்கள் உள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இந்த ரிப்போர்ட்டை நேற்று லீக் செய்தது, அல்-ஜசீரா.
-
பொதுபல சேனா, இராவணா சக்தி அமைப்புக்களை தடைசெய்ய சந்திரிக்கா முயற்சி
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவும் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து, எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு முன்னர், பொதுபல சேனா மற்றும் இராவணா சக்தி ஆகிய அமைப்புகளை தடைசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
றமழான் மாத பகல் வேளைகளில் காத்தான்குடியில் காலை முதல் அஸர்த் தொழுகை வரை ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகளினது முன்பகுதியை திரையிட்டு மறைத்தல் அவசியம்- காத்தான்குடி ஜம்மியதுல் உலமா அறிவிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் வாழும் சகோதர, சகோதரிகளுக்கு புனித றமழான் கால நடவடிக்கைகள் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலுமுள்ள பள்ளிவாயல்கள் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மஹியங்கனை ஜூம்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் – றிசாத் பதியுதீன் கண்டனம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மஹியங்கனை: மஹியங்கனை ஜூம்ஆ பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அநாகரிமான செயற்பாடுகள் குறித்து தாம் வண்மையாக கண்டனத்தை தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மதத் தளங்களின் புன்னியத்தை சிதைக்கும் காரியங்களில் ஈடுபடும்
-
இனவாதக் கும்பல்களினால் தலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவது அரசின் பொறுப்பு-மஹியங்கனை பள்ளி தாக்குதல் கண்டனச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை அனுஷ்டித்துவரும் வேளையில், மஹியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மீது இரவு 11.20 மணியளவில் கற்களால் தாக்குதல் நடாத்தியதோடு, அங்கு பன்றி இறைச்சியையும் வீசியெறிந்துள்ள சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
-
கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சருடன் ஜனாதிபதி அவசர பேச்சுவார்த்தை
கொழும்பு: கிழக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாகாண ஆளுநருக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போர்க்கொடி தூக்கிவரும் நிலையில், அந்த சர்ச்சையைத் தீர்ப்பது தொடர்பிலான முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
-
மஹியங்கனையில் மஸ்ஜிதுல் அரபா மீது தாக்குதல்: பன்றி இறைச்சியும் வீச்சு
மஹியங்கனை: மஹியங்கனைநகரில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் அரபா மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.,ரமழான் காலத்தில் முஸ்லிம்களின் இராக்கால வணக்கமான தராவிஹ் தொழுகை முடிந்த பிறகு சுமார் இரவு 11.10 மணியளவில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவொன்று குறித்த மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா மீது கல் வீசியுள்ளனர்.
-
வட்டிக்கு வாகனம் வாங்குதல் தொடர்பான செய்தியின் முன்பக்கத்தில் காத்தான்குடி ஜ.உ தலைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளமையானது கண்டித்தக்கது
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்குவதற்கு காத்தான்குடி உலமாக்கள் அங்கீகாரம் எனும் செய்தியில் முன்பக்கத்தில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத்தலைவர் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம் அலியார் பலாஹி அவர்களின் புகைப்படத்தினை சம்பந்தமில்லாமல் வார உரைகல் பத்திரிகை வெளியிட்டமைக்காக காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
-
மன்னம்பிட்டி மினி பஸ் விபத்தில் மூவர் பலி – 20பேர் காயம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மன்னம்பிட்டி: கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் மினி பஸ் வண்டியொன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 04.00 மணியளவில் மன்னம்பிட்டிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.