வட்டிக்கு வாகனம் வாங்குதல் தொடர்பான செய்தியின் முன்பக்கத்தில் காத்தான்குடி ஜ.உ தலைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளமையானது கண்டித்தக்கது

jm– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்குவதற்கு காத்தான்குடி உலமாக்கள் அங்கீகாரம் எனும் செய்தியில் முன்பக்கத்தில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத்தலைவர் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம் அலியார் பலாஹி அவர்களின் புகைப்படத்தினை சம்பந்தமில்லாமல் வார உரைகல் பத்திரிகை வெளியிட்டமைக்காக காத்தான்குடி ஜம்மியதுல் உலமா  தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

வார உரைகல் பத்திரிகையின் செய்தி தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்குவதற்கு காத்தான்குடி உலமாக்கள் அங்கீகாரம் என்ற வார உரைகல் பத்திரிகையின் செய்தி தொடர்பாக… காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

05.07.2013ம் திகதி வெளியான வார உரைகல் பத்திரிகையின் 265ம் பதிவில் மேற்படி விடயமாக விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக உலமா சபையின் பத்வாக்குழுத்தலைவர் மெலவி ஏ.ஜீ.எம். அமீன் பலாஹி அவர்களே இவ்வாறு பத்வா வழங்கியதாக தவிசாளர் தன்னிடம் தெரிவித்ததாக வார உரைகல்லுக்கு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றஊப் ஹாஜியார் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வாறே சில நாட்களுக்கு முன்னர் வார உரைகல் குறுந்தகவலில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்கலாம் என்று பத்வா வழங்கியுள்ளது என சர்வாதிகாரமிக்க தவிசாளர் தெரிவித்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 மேற்படி கருத்துக்கள் தொடர்பாக

குறித்த எஸ்.எம்.எஸ் குறுந்தகவலில் குறிப்பிட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு மேற்படி விடயம் குறித்து பேசப்பட்ட நகர சபை கூட்டத்தின் ஒலிப்பதிவினை கேட்டபோது உலமாக்கள் எனக்கு பத்வா வழங்கியுள்ளார்கள் என தவிசாளர் குறிப்பிட்டிருந்தார். எனினும், ஜம்இய்யாவின் பெயரை அவர் உபயோகிக்கவில்லை.

மேலும் வார உரைகல் பத்திரிகையில் வெளியான செய்தியின் இறுதிப்பகுதியில் மௌலவி அமீன் பலாஹி அவர்களே பத்வா வழங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்து. மௌலவி அமீன் பலாஹி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் அவ்வாறு எந்தவித பாத்வாவையும் வழங்கவில்லை எனவும் இவ்விடயம் தொடர்பில் தனக்கு எவ்வித தொடர்புமில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

உலமாக்கள் அவ்வாறு பத்வா வழங்கியிருந்தால் அது பற்றி குறிப்பிடுவது தவிசாளரின் கடமையாகும். மேலும், தனிநபர்கள் வழங்குகின்ற பத்வாவிற்கு ஜம்இய்யா எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டாது.ஆகவே

மேற்படி வெளியான செய்தியின் முன்பக்கத்தில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத்தலைவர் மௌலவி அல்ஹாஜ் எஸ் அலியார் பலாஹி அவர்களின் புகைப்படத்தினை சம்பந்தமில்லாமல் வெளியிட்டமைக்காக ஜம்இய்யா தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறான மார்க்க விடயங்களின்போது நேரடியாக ஜம்இய்யாவின் வழிகாட்டல்களையும் பத்வாவினையும் பெற்று இயங்குவது சிறந்தது என ஜம்இய்யா அனைவருக்கும் ஆலோசனை வழங்குகின்றது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jm

Published by

Leave a comment