புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினால் நோன்பாளிகளுக்கு கஞ்சி சமைத்து வினியோகிக்கப்பட்டது

விசேட நிருபர்.

2013-07-11 16.28.45காத்தான்குடி: நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க  பள்ளிவாயல் ஊடாக கஞ்சி காய்ச்சிகொடுப்பது முன்னோர்களின் மிக சிறந்த வழிமுறையாகும். அந்த வகையில்  புதியகாத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் புதிய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இம்முறை சுமார் 1100 குடும்பங்களுக்கு புனித ரமழான் மாதநோன்பு திறப்பதற்காக கஞ்சி வினியோகிக்கப்பட்டது.பிரபல சமையல் காரா் அபுல்ஹஸன் என்பவரை நியமித்து மிகவும் தரமான  கஞ்சினை சமைத்து மஹல்லா மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. கஞ்சினை பெற சிறியவா்கள், பெரியவா்கள், தாய்மார்கள் என பலரும் சமூகமளித்திருந்ததினைக் காணக் கூடியதாக இருந்தது.

ஒரு நாள் கஞ்சினை சமைக்க சுமார் ரூபா 150,000/= ரூபாய் தேவைப்படுவதாக பள்ளிவாயல் நிர்வாக சபையினர் தொிவித்தனர்.

இதன்போது  புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவா் அல்ஹாஜ்.கே.எல். றஹீம் JP, செயலாளர் அல்ஹாஜ். ஏ.எல்.டீன் பைரூஸ் JP, நிர்வாக சபை உறுப்பினா்களான ஏ.எல்.எம்.அறபாத் JP, எம்.சிஹாப்தீன்,ஏஎல்.பௌமி, பீ.எம்.பைசர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

2013-07-11 16.28.452013-07-11 16.13.122013-07-11 16.11.572013-07-11 16.11.212013-07-11 16.13.34

Published by

Leave a comment