இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை

mathewsடுபாய்: இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசப்படாமையடுத்தே மெத்தியூஸிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் பங்கேற்கமாட்டார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment