Category: Your Kattankudy
-
ஆண்மை அதிகரிப்பு மருந்துக்காக கடத்தப்படும் கடல்பல்லிகள்
இந்தியா: இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக சீனா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான உலரவைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டோனியால் தோற்றது இலங்கை!
-MJ டிரினாட்: மேற்கிந்தியத் தீவுகளில் கடந்த 3 வாரங்களாக இடம்பெற்றுவந்த முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருக்கின்றது. 201 வெற்றி ஓட்ட இலக்கை இலங்கை அணி இந்தியாவுக்கு வழங்கி இருந்தது. இவ் ஓட்ட இலக்கை இந்தியா மிக இலேசாக பெற்று வெற்றி பெரும் என்றே பலர் நினைத்திருந்தனர்.
-
‘ஸஹாபாக்கள் வரலாறு’ – ரமளான் விசேட ஒலிப்பதிவு (பகுதி-2)
ஓலிப்பதிவு: பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் -2, எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி: காத்தான்குடி 06 கடற்கரை வீதி (சட்டத்தரணி அப்துல் ஜவாட் சேர் காரியாலயத்திற்கு முன்னால்) வசித்து வந்த அல்ஹாஜ். எம்.சாஹூல் ஹமீட் தனது (76) வது வயதில் 11.07.2013 வியாழக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.
-
அநாமோதய அழைப்புக்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்கவும்: பொலிஸார்
கொழும்பு: பொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்புப்பிரிவு, பயங்கரவாத விசாரணை திணைக்களம் ஆகிய இடங்களில் இருந்து பேசுகின்றோம் என்று வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி கவனமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
உலகக் கிண்ண கிரிக்கட் 2015 போட்டிகளுக்கு அயர்லாந்து தெரிவு!
-MJ டுபாய்: உலகக் கிண்ண லீக் சம்பியன்ஸிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகின்றன.
-
வடக்கு உட்பட 3 மாகாணங்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன
கொழும்பு: இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதியை தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமாகாணம், மத்தியமாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் இம்மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
-
‘ஸஹாபாக்கள் வரலாறு’ ரமளான் விசேட ஒலிப்பதிவு
காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் -1 எமது வாசகர்களுக்காகப் பதிவேற்றப்படுகிறது.
-
‘பொதுபலசேனவிற்கு நோர்வே ஒருபோதும் உதவவில்லை’ – நோர்வே தூதுவர் கிறீற் லோச்சென்
சாய்ந்தமருது: பொதுபலசேனவிற்கு நோர்வே ஒருபோதும் உதவவில்லை அதேபோல எதிர்காலங்களில் உதவப்போவதுமில்லை. நாம் எப்போதும் உலக சமாதானத்திற்காகச் செயற்பட்டுவருகிறோம் என்று இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோச்சென் தெரிவித்தார்.
-
வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்குவதற்கு காத்தான்குடி உலமாக்கள் அங்கீகாரம் என்ற வார உரைகல் பத்திரிகையின் செய்தி தொடர்பாக…
CMM அமானி காத்தான்குடி: 05.07.2013ம் திகதி வெளியான வார உரைகல் பத்திரிகையின் 265ம் பதிவில் மேற்படி விடயமாக விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக உலமா சபையின் பத்வாக்குழுத்தலைவர் மெலவி அல்ஹாஜ் AGM. அமீன் பலாஹி அவர்களே இவ்வாறு பத்வா வழங்கியதாக தவிசாளர் தன்னிடம் தெரிவித்ததாக வார உரைகல்லுக்கு றஊப் ஹாஜியார் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
-
ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம்.ஆதம்லெப்பை வபாத்தானார் – ஜனாஸா நல்லடக்கம் இரவு 11.00மணிக்கு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனியின் தந்தை எம்.எம்.ஆதம்லெப்பை (ஓய்வு பெற்ற அதிபர்) (வயது85) இன்று புதன்கிழமை பிற்பகல் 05.00மணியளவில் காத்தான்குடி 02 இமாம் கொமைனி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வபாத்தானார்.
-
கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் ஹக்கீம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு