Category: Your Kattankudy
-
இனி மரப்பெட்டிகள் இல்லை – மாகாணசபைத் தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டிகள்
கொழும்பு: எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், புதிய வாக்குப் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதுவரை மரத்தினால் செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு நாடுகளில், தற்போது பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
-
காலி கரந்தெனிய மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட இருக்கும் தொழிநுட்ப கற்கைகளுக்குரிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்
– ஏ.எல்.எம்.தாஹிர் காலி: காலி கரந்தெனிய மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட இருக்கும் தொழிநுட்ப கற்கைகளுக்குரிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
-
‘எமது மாணவ சமூகம் கல்வித் துறையில் சாதணைகளை படைக்க வேண்டும் என்பதினால் பல்வேறு வளங்களை பெற்றுக் கொடுத்துவருகின்றேன்’: றிசாத் பதியுதீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: எமது மாணவ சமூகம் கல்வித் துறையில் சாதணைகளை படைக்க வேண்டும் என்பதினால் பல்வேறு வளங்களை பெற்றுக் கொடுத்துவருகின்றேன். என்று தெரிவித்த வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இப்பாடசாலை முதற்தர பாடசாலையாக மிளிர பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
-
பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கும் அரசதரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தானதாகும்’: -நல்லாட்சிக்கானமக்கள் இயக்கம்-
– PMGG ஊடகப் பிரிவு, FM. பர்ஹான் காத்தான்குடி: ‘பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் இந்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மக்களின் ஆணைகளைப் பெற்று பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலுமாக அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதுவரை இப்பிரச்சினைகளுக்க தீர்வுகளைக் காணமுடியாமல்
-
அப்ரிடிக்கு புகழாரம்!
-MJ கயானா: நேற்று மாலை கயானா மைதானத்தில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் 126 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
-
மஹியங்கனை பள்ளிவாசல் உடைப்பிற்கு ரவூப் ஹக்கீம் தான் காரணம் – ஜனாதிபதி
கண்டி: மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து செப்பீல்ட் நகரில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்து!
-MJ செப்பீல்ட்: இங்கிலாந்து செப்பீல்ட் நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று ஞாயிறு பி.ப 2:30 மணியளவில் ஏற்ப்டட பாரிய தீ விபத்தினால் செப்பீல்ட் நகரம் புகை மண்டளமாகக் காட்சியளித்தது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் வார இறுதி நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது வானில் ஏற்பட்ட பாரிய புகை மண்டளத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
-
நாமல் ராஜபக்ஸ சுருட்டியதாகக் கூறப்படும் அந்த 400 மில்லியன் ரூபாய்!
கொழும்பு: 400 மில்லியன் ரூபாய் லஞ்சப் பணத்தை தனியாக நாமல் சுருட்டிக் கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சிங்கள இணையத்தளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
“இந்தியாவில் மகளிர் ஷரியா நீதிமன்றம் தேவை”
தமிழ்நாடு: இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் மத மற்றும் பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, இஸ்லாமியப் பெண்களுக்கு என்று தனியாக, ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஒன்று முன்வைக்கபப்ட்டுள்ளது.
-
‘ஸஹாபாக்கள் வரலாறு’ ரமளான் விசேட ஒலிப்பதிவு (பாகம் 3,4)
காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் -3 எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.
-
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கைக்கு ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் பதில்
புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்குவதற்கு காத்தான்குடி உலமாக்கள் அங்கீகாரம்’ என்ற ‘வார உரைகல’ பத்திரிகையின் செய்தி தொடர்பாக கடந்த 10ம் திகதி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கை உப்புச்சப்பில்லாத ஒரு மழுப்பல் அறிக்கையேயாகும்.
-
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் முஸ்லிம்கள் இன்னும் எதிர் காலத்தில் வாக்களிக்கலாமா? – ஸ்ரீ.ல.மு.கா முன்னாள் மாநகர உறுப்பினர் என்.கே. றம்ழான்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட பன்றியின் உறுப்புக்களைக் கொண்டு மிக மோசமான வகையில் தாக்குதல் நடாத்திய சூத்திரதாரிகளை பாதுகாப்புத்தரப்பு அடையாளங்கண்டு நீதியின் முன் நிறுத்துவதோடு பள்ளிவாயல்களை தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கு