கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவும் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து, எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு முன்னர், பொதுபல சேனா மற்றும் இராவணா சக்தி ஆகிய அமைப்புகளை தடைசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பௌத்த மற்றும் இஸ்லாம், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உள்ளிட்டத் தரப்பினர் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளனர். பொதுபல சேனா, இராவணா சக்தி அமைப்புகள் அரசாங்கத்தினால் வழி நடத்தப்பட்டு வரும் குழுக்கள் என இவர்கள் மதத் தலைவர்களை சந்தித்து எடுத்து கூறியுள்ளனர்.
இவர்கள் இதற்கான சில புள்ளிவிபரங்களை சாட்சியமாக முன்வைத்துள்ளனர்.
Leave a comment