அறிமுகப் போட்டியில் உலக சாதனை படைத்தார் ஆஷ்டன் ஏகார்!

ashton_agar_002[1]லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 98 ஓட்டங்களை எடுத்த அவுஸ்திரேலியாவின் ஆஷ்டன் ஏகார் சாதனை படைத்துள்ளார். இவர் 11வது வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் நட்டிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 215 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 75 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

மறுநாள் முதல் இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து திணறியது.

பின் இணைந்த பிலிப் ஹியுஸ், ஆஷ்டன் ஏகார் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். அபாரமாக ஆடிய ஏகார், அறிமுக போட்டியில் அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹியுஸ், டெஸ்ட் அரங்கில் தனது 7வது அரைசதம் அடித்தார். இவர்களை பிரிக்க, இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், 10வது விக்கெட்டுக்கு 163 ஓட்டங்களை சேர்த்த போது, பிராட் வேகத்தில் ஏகார் (98) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 280 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ashton_agar_002[1]

அவுஸ்திரேலியாவின் ஹியுஸ், ஏகார் ஜோடி 10வது விக்கெட்டுக்கு 163 ஓட்டங்களை சேர்த்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 10வது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்களை சேர்த்த ஜோடிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக 1973ல், ஆக்லாந்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் ஹாஸ்டிங்ஸ், கோலிங்கே ஜோடி 151 ஓட்டங்களையும் சேர்த்தது. இதேபோல 1997ல், ராவல்பிண்டியில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் அசார் மகமூது, முஷ்தாக் அகமது ஜோடி 151 ஓட்டங்களை சேர்த்தது.

அபாரமாக ஆடிய அவுஸ்திரேலியாவின் ஆஷ்டன் ஏகார் 98 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில், 11வது வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.

முன்னதாக 1902ல் மெல்போர்னில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஆம்ஸ்டிராங் 45 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது, அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

தவிர, டெஸ்ட் போட்டியில் 11வது வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களைள எடுத்த வீரர்கள் வரிசையில், மேற்கிந்திய தீவுகளின் டினோ பெஸ்டை பின்தள்ளி, முதலிடம் பிடித்தார் ஏகார் (98 ஓட்டங்கள்).

கடந்த ஆண்டு பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் டினோ பெஸ்ட் 11வது வீரராக களமிறங்கி 95 ஓட்டங்களை எடுத்தார். Ls

Published by

Leave a comment