Author: yourkattankudy.com
-
காத்தான்குடியின் தற்போதய கட்டுமான நிலவரங்கள்
– AK-77 காத்தான்குடி: பொருளாதார உச்ச கட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும், உண்ணாது குடிக்காது பணத்தை சேமித்து தனது பிள்ளைக்கு, சகோதரிக்கு ஓர் வீட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் காத்தான்குடியில் வீடுகள் துரிதமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
-
சிரியா: 11000 போராளிகள் சுட்டுக் கொலை!
– SHM வாஷிங்டன்: சிரியா உள்நாட்டு சண்டையின் போது பிடிபட்ட 11 ஆயிரம் போராளிகளை அந்நாட்டு அரசாங்கம் கொடுமைப் படுத்தி சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா மற்றும் ஐ.நா. வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வெலிஓயா பிரதேச ஆலோஷகராக திலகாலங்கார ஹிமி நியமனம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லாஹ் வெலிஓயா: கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சரின் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச ஆலோஷகராக ஸ்ரீதர்ம பிரனீதாராமயவின் பிரதம மதகுருவான வண.பொலன்னறுவே திலகாலங்கார ஹிமி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
உணரப்படாத தீமைகள்
கட்டாரிலிருந்து பழுளுல்லாஹ் பஹ்ஜான் தோஹா: கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதி வியாழன் தோரும் நடைபெரும் வாராந்த பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித்அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா பயணம்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர் இலங்கையர்களையும் அந்த நாட்டின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று இலங்கையில் இருந்து பயணமாகியுள்ளனர்.
-
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கான அனுமதி – கிண்ணியா வரவேற்பு கோபுரம்
நகரபிதாவின் ஊடகப் பிரிவு கிண்ணியா: கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் மிக நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் வரவேற்பு கோபுரமானது தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டது சம்பந்தமாக நகரபிதாவினால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயிற்கு எழுத்து மூலமாக 2014.01.20 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்
-
அல்தாப் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கல் நகரபிதா ஹில்மியினால் ஆரம்பித்து வைப்பு
ரைஸ் கிண்ணியா: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னெடுக்கும் மஹிந்த சிந்தனைத் திட்டத்திற்கு அமைவாக இன்று நாடலாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கல் திட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வு அல்தாப் பாடசாலையிலும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் – அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள மாலைத்தீவு நாட்டின் புதிய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் இன்று கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார்.
-
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட நிகழ்வுகள்
– FM. பர்ஹான் கொழும்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்று திடத்தின் கீழ் இந்த வருடத்திற்கான இளைஞர் பரிமாற்றுத்திட்டத்தில் அம்பாரை மாவட்ட இளைஞர் ,யுவதிகள் பங்கேற்ற நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
-
அபுதாபி விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி இன்று பங்கேற்பு
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒருநாள் விஜயம் மேற்கொண்டு நேற்று பிற்பகல் அபுதாபி பயண மானார். ஐக்கிய அரபு இராச்சியத் தின் தலைநகரான அபுதாபியில் இன்று நடைபெறும் செய்யத் எதிர்கால வலு சக்தி விருது வழங்கும் (Zayed future Energy Prize Awards Ceremony)
-
காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர் அப்துல் அஸீஸ் கட்டாரில் வபாத் – ஜனாஸா இன்று நல்லடக்கம்
பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் மட்டக்களப்பு காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட உமர்தீன் அப்துல் அஸீஸ் வயது 57 நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11 மணிக்கு கட்டார் ருமைலா வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார்.
-
படுவான்கரை மற்றும் எழுவான்கரை மக்களின் மிக நீண்ட காலக் கனவாக காணப்பட்ட மண்முனைப் பாலத்தின் நிர்மாண வேலைகள் முடிவுறும் தறுவாயில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தின் நிர்மாண வேலைகள் தற்போது முடிவுறும் தறுவாயில் காணப்படுவதாக அப் பால நிர்மானப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் தெரிவித்தனர்.