திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கான அனுமதி – கிண்ணியா வரவேற்பு கோபுரம்

Yourkattankudy
Yourkattankudy

நகரபிதாவின் ஊடகப் பிரிவு

கிண்ணியா: கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் மிக நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் வரவேற்பு கோபுரமானது தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டது சம்பந்தமாக நகரபிதாவினால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயிற்கு எழுத்து மூலமாக 2014.01.20 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை அங்கீகரித்து பேசும் போது ‘இந்த வரவேற்பு கோபுரத்தினை தொடர்வதற்கான முயற்சியானது மிக நீண்ட காலமாக டொக்டர் ஹில்மியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் செய்யப்பட்ட திருத்தங்களுக்கேற்ப மேலதிகமாக மீதமுள்ள வேலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வழங்குகிறது என்றும்’ தெரிவித்தபோது நகரபிதா சபையில் எழுந்து நின்று ‘ வேலையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கலாமா என கேட்டபோது’ அமைச்சரவர்கள் ‘ஆம்’ என பதிலளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து உரையாடியதில் வரவேற்பு கோபுரத்தினை தொடர்வதற்கான சாதகமான சமிக்ஞைகள் அவரிடமிருந்து தென்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த வரவேற்பு கோபுர நிர்மாணப் பணிகளுக்கான நிதி கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மூலமாக வழங்கப்பட்டு ஊநுஊடீ மூலமாக இதன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது யாவரும் அறிந்த விடயமே.

தற்காலிக இடைநிறுத்தத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட வரவேற்பு கோபுர நிர்மாண பணிகளை தொடர்வதற்கான அனுமதியினை பெறுவதற்கு நகரபிதா கிட்டத்தட்ட 10 இற்கும் மேற்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தொடர்ந்தும் பேசியதுடன் அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோருடன் பலமுறை கலந்துரையாடியதன் விளைவாக பெறப்பட்ட ஒரு வெற்றியென நகரபிதா ஹில்மி மஹ்ரூப் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment