கிண்ணியா: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னெடுக்கும் மஹிந்த சிந்தனைத் திட்டத்திற்கு அமைவாக இன்று நாடலாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கல் திட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வு அல்தாப் பாடசாலையிலும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் வருகை தந்திருந்தார். நகரபிதா மாணவரக்களுக்கு சத்துணவினை ஊட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். கல்விச் சேவைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சத்துணவு வழங்கல் திட்டம் கிண்ணியா வலய மட்டத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு இணங்க ஆரம்ப நிகழ்வு அல்தாப் பாடசாலையில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், பிரதிக் கல்விப் பணிப்பாளர் நசுஹர்கான், கோட்டக்கல்வி பணிப்பாளர் அகது, ஆசிரிய ஆலோசகர் அஸ்கர், பாடசாலை அதிபர் முஸம்மில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment