காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர் அப்துல் அஸீஸ் கட்டாரில் வபாத் – ஜனாஸா இன்று நல்லடக்கம்

azeesபழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்

மட்டக்களப்பு காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட உமர்தீன் அப்துல் அஸீஸ் வயது 57 நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11 மணிக்கு கட்டார் ருமைலா வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார்.

அன்னார் முஹம்மட் முர்ஷித் , முஹம்மட் முப்தி, யூசுப் அலி ஆகியோரின் தந்தையும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாதின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கட்டார் நேரப்படி 3.30 மணிக்கு அஸர் தொழுகையைத் தொடர்ந்து கட்டார் அபூ ஹாமூர் பள்ளிவாயலில்; தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இதேவேளை காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின் இவருக்கான ஜனாஸா தொழுகை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில நாட்களாக கட்டார் ருமைலா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே வபாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Published by

Leave a comment