கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒருநாள் விஜயம் மேற்கொண்டு நேற்று பிற்பகல் அபுதாபி பயண மானார். ஐக்கிய அரபு இராச்சியத் தின் தலைநகரான அபுதாபியில் இன்று நடைபெறும் செய்யத் எதிர்கால வலு சக்தி விருது வழங்கும் (Zayed future Energy Prize Awards Ceremony) விழாவில் கலந்துகொள் வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பிற்பகல் அபுதாபி பயணமானார்.
இப்பரிசு இணையத்தளத்தின் பிரகாரம் புதுப்பிக்கத்தகு வலுசக்தியின் தலைமைத்துவம் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பான நீண்டகால தொலைநோக்கு புதியவற்றை காணல், அழுத்தம் என்பவற்றை பிரதிபலிக்கும் சாதனைக்கான வருடாந்த பரிசாகும்.
இப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கிடையே ஜெனரல் இலக்ரிக், வோல்மார்ட் ஆகிய பல்தேசிய கம்பனிகள் உட்பட பலர் இடம் பெறுகின்றனர்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதோடு அங்கு வாழ்கின்ற இலங்கையர்களையும் சந்திப்பார்.
Published by

Leave a comment