Author: yourkattankudy.com
-
லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
ஹிக்கடுவ: ஹிக்கடுவ – கோணபினுவல பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையோடு ‘இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு’ கடந்த 26.06.2015 வெள்ளிக்கிழமை காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா அறபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
-
குவைத் தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டார்
குவைத்: குவைத் நாட்டில் ஷியா பள்ளிவாயலில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தகவலை குவைத்தின் அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.
-
மறைவான பல விடயங்களில் ஆழமான விசுவாசத்தைக் கொள்ளவேண்டிய கடப்பாடு ஒரு உண்மையான முஸ்லிமுக்கு இருக்கின்றது
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் மறைவான பல விடயங்களில் ஆழமான விசுவாசத்தைக் கொள்ளவேண்டிய கடப்பாடு ஒரு உண்மையான முஸ்லிமுக்கு இருக்கின்றது, முதலாவதாக ஒரு அழைப்பாளரின் அல்லது தூதரின் அழைப்பிற்கு செவி மடுத்து பிரபஞ்ச கர்த்தாவான எல்லாம் வல்ல அல்லாஹ்வைக் கொண்டு ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு விசுவாசியிடம் ஏற்படுகின்றது.
-
ஒரு வைத்தியசாலை நிருவாகத்தை கூட ஒழுங்கான முறையில் கொண்டு நடத்த முடியாத வங்குரோத்து நிலைமையில் மேல் மாகாண சபை இருக்கிறது
கொழும்பு: ஒரு வைத்தியசாலை நிருவாகத்தை கூட ஒழுங்கான முறையில் கொண்டு நடத்த முடியாத வங்குரோத்து நிலைமையில் மேல் மாகாண சபை இருப்பதாக குற்றம் சுமத்திய மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனால் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடணடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.
-
பெண்கள் மீதான வன்முறைகளை தடுப்பதற்கு என்ன செய்யலாம்?
கொழும்பு: பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் குறிப்பாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இந்தியா, இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அதிகரித்திருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. தினந்தினம் வெளியாகும் செய்திகளைப் பார்த்து மனித குலத்தின் மிருகத் தனத்தை எண்ணித் தலைகுனிய வேண்டியுள்ளது.
-
ஜூலை 3-14 வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்
கொழும்பு: பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு 400 கோடி செலவாகும்!!
கொழும்பு: இம்முறை பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 400 கோடி ரூபா செலவாகுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். நேற்று ஊடகமாநாட்டில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வியின்போதே இதனை அவர் தெரிவித்தார்.
-
ஜூலை 6 -14 வரை வேட்புமனு ஏற்பு: தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார், க. பொ.த (உ/த) பரீட்சைக்கு மாற்று ஏற்பாடு
நாளை திங்கட்கிழமை முதல் வேட்புமனுக்களை கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக்கொள்ள முடியும் கொழும்பு: பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் துரிதமாக மேற்கொண்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் யூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் சுயேச்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தை இப்போதிருந்தே செலுத்த முடியுமெனவும் நேற்று தெரிவித்தார்.
-
நடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்- மசூர் மௌலானா
கொழும்பு: சிறுபான்மை மக்களுக்கு பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்த இருந்த 20 வது திருத்தம் இப்போதைக்கு நிறைவேற்றப்படாமலே பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களின் மத்தியில் சிறியளவிலான மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தோற்றுவித்திருப்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.
-
துனீசியாவில் ‘வன்முறையை போதிக்கும்’ பள்ளிவாசல்கள் மூடப்படும்
லண்டன்: துனீசியாவில் வன்முறையை போதிப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள 80 பள்ளிவாசல்களை மூடிவிடவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.