ஒரு வைத்தியசாலை நிருவாகத்தை கூட ஒழுங்கான முறையில் கொண்டு நடத்த முடியாத வங்குரோத்து நிலைமையில் மேல் மாகாண சபை இருக்கிறது

Mujibur Rahmanகொழும்பு:  ஒரு வைத்தியசாலை நிருவாகத்தை கூட ஒழுங்கான முறையில் கொண்டு நடத்த முடியாத வங்குரோத்து நிலைமையில் மேல் மாகாண சபை இருப்பதாக குற்றம் சுமத்திய மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனால் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடணடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் நிலவிவரும் குழப்ப நிலைமைகள் காரணமாக அதன் நிருவாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என அங்குள்ள மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை மாகாண சபையிடமிருந்து மத்திய அரசுக்கு வழங்குவது குறித்து கடந்த புதனன்று இடம்பெற்ற மாகாண சபை அமர்வில் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா பிரேரணையொன்றை முன்வைத்தார்.

இது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறைக்கும் இந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான்இ கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தின்போது மாகாண சபையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

மாகாண சபைக்கிருந்த டீவுவு இல்லாமல் செய்யப்பட்டு அது பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்கொண்டு செல்லப்பட்டது. அத்துடன்இ மாகாண சபைக்கு சொந்தமான பல காணிகள் புனித பூமி திட்டத்தினூடாக மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதேவேளைஇ மாகாண சபைக்கு வருவாயை ஈட்டிக்கொடுக்கும் வாராந்த பொதுச் சந்தையை திவிநெகும திட்டத்தினூடாக கைப்பற்றப்பட்டது. மஹிந்த ஆட்சியில் இவ்வாறு பல அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை மைத்திரி அரசின் கீழும் தொடர்வதற்கு நிமல் ஹன்ஸா முயற்சிக்கின்றார். இதனை அனுமதியளிக்க முடியாது என முஜிபுர் ரஹ்மான் வாதிட்டார்.

மாகாண சபையானது அதிகாரத்தை பகிர்ந்து நாட்டின் இன விரிசலை தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது. பல தலைவர்கள் உயிர் தியாகங்களை செய்தே நாட்டில் மாகாண சபையை உருவாக்கினார்கள். அகவே இதனை நாம் பாதுகாக்க வேண்டும். மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

நீர் கொழும்பில் வைத்தியசாலையின் 7 மாடிக்கட்டடம் தொடர்பாக முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான மேல்மாகாண சபையினால் நடவடிக்கை எடுக்க முடியாததனாலேயே மக்கள் அதனை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என கூறுகின்றனர்.

பிரசன்ன ரணதுங்கவினால் மக்களின் கோரிக்கைகளையும் மாகாண சபைக்கு உறுத்தான வேலைகளையும் நிருவாகங்களையும் சரியான முறையில் நிருவகிக்க முடியாமையினால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். உங்களின் இயலாமையின் காரணமாக ஆட்சி பொறுப்பை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்குமாறு முஜிபுர் ரஹ்மான் சபையில் கோரிக்கை விடுத்தார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் நிர்மானிக்கப்பட்ட வைத்தியசாலையின் 7 மாடிக்கட்டடம் கட்டப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியடையாத நிலையில் அது இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இதனை நிர்மானிப்பதில் ஊழல் இடம்பெற்றிருப்பதனாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அமைச்சர் நிமல் ஹன்ஸா ஊழல் காரர்களை பாதுகாப்பதற்கு முயற்சிக்கின்றார்.

மக்களின் கோரிக்கைகள் நியயமானதாகும். அந்த கட்டடம் எந்த சந்தர்ப்பத்தில் இடிந்து விழும் என்று தெரியாமல் இருக்கின்றது. இதனால் பெரும் ஆபத்துக்கள் நேரிடலாம். நடுத்தர மற்றும் அப்பாவி ஏழை மக்களே இந்த வைத்தியசாலையை பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் இந்த கட்டடத்துக்கு ஆபத்து இருப்பதனால் உயிர் ஆபத்துக்கள் ஏதும் நேர்ந்தால் மேல் மாகாண சபையே பெறுப்பேற்க வேண்டும்.

எனவே மக்களின் பாதுகாப்பு உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. உடனடி தேவைக்கக மத்திய அரசின் உதவியை பெற்றுக்கொள்ளலாம். என்றாலும் மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க இடமளிக்க முடியாது எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

Published by

Leave a comment