கொழும்பு: இம்முறை பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 400 கோடி ரூபா செலவாகுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். நேற்று ஊடகமாநாட்டில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வியின்போதே இதனை அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 300 கோடி ரூபா செலவானதாகவும் பாராளுமன்றத் தேர்தலுக்கு 400 கோடி ரூபா செலவாகலாமென மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்கு முறை இல்லாததாலும், வாக்குகள் எண்ணப்படுவதில் நேரம் மட்டுப்படுத்தப்பட்டமையாலும் செலவுத் தொகையை 300 கோடிக்கு மட்டுப்படுத்த முடிந்தது.
ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் இது சாத்தியப்பட முடியாது. விருப்பு வாக்கு முறையுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் செலவுத் தொகை 400 கோடி அளவில் அமையலாம் என மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.
Published by

Leave a comment