பிரபல கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் காலமானார்

Lionel mendisகொழும்பு: பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரை உருவாக்கிய பிரபல பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் (80) காலமானார். பந்துல வர்ணபுர, சிதத் வெத்தமுனி, அர்ஜுன ரணதுங்க, பிரண்டன் குருப்பு, போன்ற வீரர்கள் முதல் மஹேல ஜயவர்தன, ரஸல் ஆனோல்ட், திலான் சமரவீர, குமார் தர்மசேன, நவீட் நவாஸ், நிரோஷன் பண்டாரதிலக, ஜெஹான் முபாரக், ஹேமந்த பொடேஜு போன்ற தற்போதுள்ள இளம் வீரர்களை பயிற்றுவித்தவர் இவராவார்.

அம்பலங்கொட, தர்மாசோக வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், 1973 இல் ஆனந்தா கல்லூரியில் தனது பயிற்றுவிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அதன் பின்னர், 1982 இல் நொன்டெஸ்கிரிப்ட் கிரிக்கெட் கல்லூரியை ஸ்தாபித்து அதன் மூலம் பல்வேறு பிரபல கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் அணிக்கு தந்தார்.

Lionel mendis

லயனல் மெண்டிஸ், 2002 இல் அமெரிக்க சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தில் விளையாட்டுக்கான கலாநிதிப்பட்டத்தை பெற்றார்.

மேலும் இவர், இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையின் காரணமாக ஐ.சி.சி விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 1998 இல் இலங்கை கிரிக்கெட் சபை இவருக்கு தங்க விருதொன்றை வழங்கி கௌரவித்திருந்தது.

Published by

Leave a comment