மௌலவி அப்துர் றஊபின் மாணவர் Aj நுஃமான் நேற்று NTJ யின் மேடையில் ஏறினார். அல்ஹம்துலில்லாஹ்!

Ntjகாத்தான்குடி: மௌலவி அப்துர் றஊபிடம் ஏழு வருடங்கள் கல்வி பயின்ற AJ நுஃமான் என்பவர் (கறுப்பு ஷேர்ட் அணிந்தவர்) மௌலவி அப்துர் றஊபிற்கெதிராக நாம் வெளியிட்ட DVD களால் கவரப்பட்டு தூய தௌஹீதை ஏற்றார். அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று நடைபெற்ற எமது மாநாட்டில் எமது மேடையிலேயே அவர் ஏறினார். இவ்வாறு ஏறியதன் மூலம் மௌலவி அப்துர் றஊபின் கொள்கை தவறானது என்பதையும் தான் அதற்கு எந்த வகையிலும் உடன்பாடில்லை என்பதையும் கலந்து கொண்ட மக்களுக்கு வெளிப்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.

Ntj

இவ்வாறு முன்வந்த இவரை நாம் பாராட்டுகிறோம். இப்படி இவர் மட்டுமல்ல எத்தனையோ றப்பானிகள் இந்தக் கொள்கை பிழையானது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவர்களால் இதை விட்டும் வெளியே வர முடியாத நிலையில் உள்ளார்கள். இதை தனிப்பட்ட வகையில் தன்னிடம் தெரிவித்ததாக மௌலவி M.C.M ஸஹ்றான் (மஸ்ஊதி) நேற்றைய மாநாட்டு உரையில் தெரிவித்தார்.

தகவல்: மௌலவி M.C.M ஸைனி (உமரீ)

Published by

One response to “மௌலவி அப்துர் றஊபின் மாணவர் Aj நுஃமான் நேற்று NTJ யின் மேடையில் ஏறினார். அல்ஹம்துலில்லாஹ்!”

  1. 5:35 இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும், அவனுடைய பாதையில் போர் செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறலாம்.
    73:19 நிச்சயமாக இது திக்ர் ஆகும், எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் ரப்பின்பால் செல்லக்கூடிய வழியை எடுத்துக் கொள்வார்.
    76: 29 நிச்சயமாக இது திக்ர் ஆகும், எனவே, விரும்பியவர் தனது ரப்பின்பால் வழியை எடுத்துக் கொள்வாராக!
    78:39 அந்த நாள் உண்மையேயாகும். எனவே, எவர் நாடுகிறாரோ அவர் தம் ரப்பின்பால் மீளுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.
    3:164 அல்லாஹ் முஃமின்கள் மீது திட்டமாகப் பேருதவி செய்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களைத் தூய்மையாளர்களாக்கியும் வைக்கிறார். அன்றி அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தனர்.
    34:6 இன்னும். கல்வி கொடுக்கப்பட்டார்களே அத்தகையோர், உமக்கு உம்முடைய ரப்பிடமிருந்து அருளப் பெற்றதை, இதுவே உண்மை என்றும், மிகைத்த, மிக்க புகழுக்குரியவனின் பாதையில் இது வழிகாட்டும் என்றும் காண்கின்றனர்.
    29:69 மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.
    3:26 நீர் கூறுவீராக! அல்லாஹ்வே ஆட்சிக்கு அதிபதியானவனே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்! நீ நாடியவரிடம் இருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய்! நீ நாடியவரைக் கண்ணியப்படுத்துகிறாய்! நன்மைகள் அனைத்தும் உன்கைவசமே உள்ளன. நிச்சயமாக நீ அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் பெற்றவன்.

    34:25 ”நாங்கள் செய்த குற்றங்கள் குறித்து நீங்கள் வினவப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்பவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்.” என்று நீர் கூறுவீராக!

    அல்லாஹ் நம்மைப் பிழை பொறுக்கத் தேடும்படியும், குறை கூறிக்கொண்டு திரிய வேண்டாமெனவும்தான் கட்டளையிட்டிருக்கின்றான்.

    சுமக்கின்ற எந்த ஆத்மாவும், மற்ற ஆத்மாவின் சமையைச் சுமக்காது. ஆயினும், அறிவில்லாமல் பிறரை வழிகெடுத்தோர் தமது பாவச் சுமைகளுடன், தாம் வழிகெடுத்தோரின் பாவச்சுமைகளைிலிருந்தும் சுமப்பர் என்பதும் இறை வாக்கே!

    41:33 எவர் அல்லாஹ்வின்பால் அழைத்து நற்கருமங்களைச் செய்து, “ நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளேன்“ என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் மிக அழகானவர் யார்? மேற்கண்டவை அல்லாஹ் நாடினால் தெளிவைத் தரலாம். அல்ஹம்துலல்லாஹ்!

Leave a comment