“மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கானது காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் காத்திரமான பணிகளில் ஒன்றாகும்”

  • ஏ.எல். டீன்பைரூஸ், பழுலுல்லாஹ் பர்ஹான்

dr mubarak madaniகாத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா இஸ்லாமியப் பணிகளில் ஒர் அங்கமாக மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான “மஸ்ஜித் நிர்வாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக மார்க்க பொறுப்புகளும்” எனும் தலைப்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கு காத்தான்குடி ஜம்இய்யாவின் தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல்காதர் (பலாஹி) தலைமையில் 10.10.2015 சனிக்கிழமை இஷா தொழுகையினை தொடர்ந்து காத்தான்குடி மெத்தை பெரிய ஜம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

நிகழ்வின் விசேட பேச்சாளராக பிரபல மார்க்க சொற்பொழிவாளர் கலாநிதி எம்.எம்.எம்.முபாறக் (மதனி) அவர்கள் கலந்து கொண்டார்.

dr mubarak madani
கலாநிதி எம்.எம்.எம். முபாறக் (மதனி)

காத்தான்குடி, காங்கயனோடை,பாலமுனை,ஒல்லிக்குலம்,சிகரம் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்ட பள்ளிவாயல்களில் இருந்து குறிப்பிட்டு அழைக்கப்பட்டிருந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள், காத்தான்குடி சம்மேளன உறுப்பினர்கள்,ஜம்இய்யத்துல் உலமா சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.ஜீ.எம். ஜெலீல் (மதனி) அவர்களின் மார்க்க சொற்பொழிவு இடம்பெற்றது.

abdul cader falahi
மௌலவி ஏ.எம். அப்துல்காதர் (பலாஹி)

நிகழ்வின் விசேட பேச்சாளராக கலந்து கொண்ட பிரபல மார்க்க சொற்பொழிவாளர் கலாநிதி எம்.எம்.எம்.முபாறக்(மதனி) உரையாற்றும் போது,

ஒரு மஸ்ஜிதுடைய நிர்வாகிகள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் பயமில்லாமல் நிற்க கூடிய சந்தர்ப்பம்தான இந்த பணியாகும்.

அல்லாஹ்வின் மஸ்ஜிதினை நிர்வகிப்பது என்பது பாரிய பொறுப்பாகும் இந்த பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கபபடும் என்று தெரிவித்தார்.

masjid seminar

ஒரு மனிதன் ஒரு பள்ளிவாயலின் நிர்வாகி ஆகிவிட்டால் அவனுக்கு தூக்கம் வரக் கூடாது காரணம் அந்த அளவு அவன் அல்லாஹ்வினை அஞ்சியவனாக அமானிதத்துடன் செயலாற்ற வேண்டும் என்பதுடன் மஸ்ஜிதினை ஆண்மீக ரீதியாகவும்,பௌதீக ரீதியாகம் பராமரிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.

காலத்தின தேவை கருதி மேற்படி ருத்தரங்கினை ஏற்பாடு செய்த மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கானது காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் காத்திரமான பணிகளில் ஒன்றாகும்.

காத்தான்குடி சமூக மேம்பாட்டிக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மேற்படி நிகழ்வின் பணிகளில் ஈடுபட்டிருந்ததினை காணக்கூடியதாக இருந்தது.​

Published by

Leave a comment