பியோங்யாங்: அமெரிக்கா துவங்குகின்ற எந்தவொரு போருக்கு எதிராகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வல்லமை வட-கொரியாவுக்கு இருப்பதாக அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். ஆளும் பாட்டாளிகள் கட்சியின் 70-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் பியோங்யாங்-இல் நடைபெற்ற பெரும் கொண்டாட்டங்களின் போது நடந்துள்ள, அவரது அரிதான உரையொன்றிலேயே கிம் ஜோங்- உன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆயிரக்கணக்கான படைவீரர்கள் அவருக்கு முன்னால் அணிவகுத்து சென்றனர். யுத்த தாங்கிகளும் ஏவுகணைகளும் பொதுமக்களின் பார்வைக்காக அணிவகுத்து சென்றன.
வளைகுடா நாடுகளை சீண்டிப்பார்த்து அதில் வெற்றியை ருசிக்கும் அமெரிக்கா, வடகொரியாவையும், ஈரானையும் பல வருடங்களாக சீண்டிப்பார்ப்பதில் தோல்வியடைந்து வரும் இத்தருணத்திலேயே வடகொரிய அதிபர் அமெரிக்காவுக்கு பதிலடி வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by
![north-korea-flag-dprk[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/north-korea-flag-dprk1.gif?w=150&h=75)
Leave a comment