உலக அஞ்சல் தினம் காத்தான்குடி தபால் நிலையத்தில் அனுஷ்டிப்பு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

post office kkyகாத்தான்குடி: ஓக்டோபர் மாதம் 9ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக காத்தான்குடி தபால் நிலையம் ஏற்பாடு செய்த உலக அஞ்சல் தின நிகழ்வு காத்தான்குடி தபாலகத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச தபால் அதிபர் கே.எம். மஸாஹிர் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி அஞ்சல் தின நிகழ்வில் தபால் நிலையத்திற்கு வருகைதந்தவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குடிபானங்கள் வழங்கப்பட்டது.

இங்கு தபால் நிலையத்தின் சேவைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

post office kky

இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பர் ,உதவி தபால் அதிபர் எஸ்.துஷ்யந்தன் ,அஞ்சல் சேவகர் கே.கேதீஸ்வரன் உட்பட காத்தான்குடி தபால் நிலையத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,அஞ்சற்காரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

post office

Published by

Leave a comment