- எம்.எச்.எம். அன்வர்
காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் பல முன்னெடுப்புக்களைச் செய்து வருவதுடன் முக்கிய நிறுவனங்கள் சமூக அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் வருகின்றது. இந்தவகையில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் உடனான சந்திப்பு இன்று காத்தான்குடியில் மீடியா போரத்தின் தலைவர் ஏ எல் டீன் பைறூஸ் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம் எஸ் எம் ஜாபிர் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பின்போது வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள், ஆளணிப் பற்றாக்குறை, வைத்தியர்கள் பற்றாக்குறை, இரத்த வங்கியின்மை போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அறிக்கை ஒன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் 2016ம் ஆண்டுக்குள் இவ்வைத்தியசாலை தேவைகளை, தான் பூர்த்தி செய்ய எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment