காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா, சம்மேளனம் ஆகியவற்றின் கவனத்திற்கு

jammiyya 2federation-logo[1]பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.

ஜம் இய்யதுல் உலமா,
காத்தான்குடி.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மேற்படி நான் காத்தான்குடியின் பிரதான நிறுவனமான உங்களிடம் சில விடயங்களை எழுத்து மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.

கிழக்கிலங்கையின் முஸ்லிம்களின் கலாச்சாரம், சமயம், ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் பிற மதத்தவர்கள் மத்தியிலும் ஏனைய முஸ்லிம்கள் மத்தியிலும் நன் மதிப்பும் மரியாதையும் பெற்ற ஒரே பிரதேசம் எமது பிரதேசமாகும். இவ்வாரான மதிப்பு கிடைத்தமைக்கு காரணம் எமது ஊரில் உள்ள உலமாக்களும், கல்விமான்களுமேயாகும்.

இவ்வாறு நன்மதிப்பை பெற்று தலை நிமிர்ந்து நின்ற நாம் இன்று தலை குனிய வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளோம்.

இஸ்லாம் “ஹராம் “என எமக்கு காட்டித்தந்த அந்நிய கலாச்சாரங்கள் எமது சமூகத்திற்குள் மெது மெதுவாக ஊடுறுவ ஆரம்பித்துவிட்டது.

இதற்கு சிறந்த ஆதாரமாக அண்மையில் காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் மிகவும் கேவலமான சினிமா பாடலுக்கு அப் பாடசாலை மாணவிகள் ஆடிய நடணம் நமதூர் மக்கள் மத்தியில் பெறும் கண்டனத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

அந்நிய ஆண்களுக்கு மத்தியில் பெண் மாணவிகள் ஆடியது சரியா? இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? போன்ற கேள்விகள் எழுகிறது.

இது போன்று அயல் பிரதேசமொன்றில் முஸ்லிம் பாடசாலையில் இடம் பெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கேவலமான விபச்சார சினிமா பாடலுக்கு ஆடிய குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியதை தாங்கள் யாவரும் அறிந்ததே!

இன்றைய காலத்தினை பொருத்தமட்டில் ஒழுக்கம், கலாச்சாரம், சமயம் தொடர்பான சில மாற்றங்களை கொண்டுவர வேண்டியதும் இது தொடர்பாக நீங்கள் கவனமெடுப்பதும். காலத்தின் கட்டயமாகும். இதனடிப்படையில் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

01. பாடசாலை, சிறுவர் விளையாட்டு நிகழ்;ச்;சி போன்ற வைபவங்களில் இசை, நடனம் போன்றவை முற்றாக தடை செய்யப்படல் வேண்டும்.

02. பொது நிகழ்வுகளில் ஆண், பெண் கலப்பினைத் தவிர்த்தல்.

03. பெண்கள் (குறிப்பாக பெண் ஆசிரியைகள், பெண் அதிகாரிகள்) ஆடை விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

04. மாணவிகள் அயல் பிரதேசங்களுக்கு சென்று பகுதி நேர வகுப்பிற்கு செல்வதில் மாற்று வழியினை ஏற்படுத்தல் (இவ் விடயத்தில் அதிக கவனம் தேவை ஏனெனில், கடந்த கால நிகழ்வுகள் நமக்கு பல படிப்பினைகளினை பெற்றுத் தந்துள்ளது.)

05. பொது இடங்களில் புகைத்தல், சிகரட் விற்பனை செய்வதை தடுத்து அது தொடர்பான சமூக விழிப்பூட்டல்களை மேற் கொள்ளல்.

இது போன்ற பல விடயங்களை கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பு : எனது கடிதத்திற்கான பதிலை மிக விரைவில் எழுத்து மூலம் தபாலில் அல்லது நேரடியாக தெரிவிக்கவும்.

ஜஸாகல்லாஹ்..

ஜுனைட்.எம்.பஹ்த்,
இல.24/2
சரீப் புரக்டர் வீதி
காத்தான்குடி-2

Published by

Leave a comment