Author: yourkattankudy.com
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் பாரிய சிரமதான நிகழ்வு
ஜுனைட்.எம்.பஹ்த் காத்தான்குடி: இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது காத்தான்குடி குழுவினரால் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05.02.2016) அன்று புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆப்பள்ளிவாயல் மைய்யவாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சகல மௌலவியாக்களுக்கும் விடுக்கும் அறிவித்தல்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவினால் ‘தஃவாக்களத்தில் ஆலிமாக்களது பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் நமது பிரதேச ஆலிமாக்களுக்காக ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30.01.2016 சனிக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் பகல் 12.30 மணி வரை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
ஞானசாரவுக்கு பிணை மனு
ஹோமாகம: பொதுபல சேனாவின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரும் பிணை மனு இன்று (28) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் ஹோமாகம நீதிமன்றத்தில் நுழைந்து நீதிமன்றை அவமதிக்கும் வித்தில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் NTJ க்கு உடனடியாகத் தேவை
எமது குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அறபுக்கல்லூரியில் நான்கு வருட ஷரீஆவின் கற்கையை மேற்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சாதாரண தரப்பரீட்சைக்கான பாடங்களைப் போதிப்பதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றனர். தற்போதைய சூழலில் ஆங்கிலப்பாடம் மாத்திரம் ஓரு ஆசிரியரால் எமது கல்லூரியில் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
-
காத்தான்குடி பிரதான வீதி வடிகான் பிரச்சினைக்கு உடனடி தீர்வு
ஜுனைட்.எம்.பஹ்த் காத்தான்குடி: காத்தான்குடி வடிகான்களில் குப்பை, கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும்,பாதசாரிகளும் பாரிய சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருவதாக எமது செய்தியின் ஊடாக அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டுவந்தோம் .
-
ஹோமாகம சம்பவம் பௌத்த தர்மத்துக்கு முரணான செயல்
ஹோமாகம: ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் சில பிக்குகள் நடந்து கொண்ட விதமானது, பௌத்த தர்மம், ஒழுக்கத்துக்கு முரணாகும்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சந்திரஜித் ஏ.மாரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் சுங்கக் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
68வது சுதந்திர தின வைபவம் காலிமுகத்திடலில்
கொழும்பு: சுதந்திர தினத்தின் 68வது தேசிய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. வழமைக்கு மாறாக இம்முறை இரண்டு கட்டங்களாக தேசிய தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. காலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு நிகழ்வுகளும், மாலை கலாசார நிகழ்வுகளும் நடைபெறவிருப்பதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
-
கல்முனை புதிய நகர அபிவிருத்தியின் பங்காளர்களாக தமிழ் மக்களும் இணைந்து கொள்வர் – அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை
ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை புதிய நகர அபிவிருத்தியின் பங்காளர்களாக தமிழ் மக்களும் இணைந்து கொள்வார்கள். இவ் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினதும், அரசியல் தலைமைகளினதும் சந்தேகங்கள் களையப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, தேசிய நீர்வளங்கள், வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் இஸ்லாமிய மாநாடு
காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இஸ்லாமிய மாநாடு’ இன்ஷா அழ்ழாஹ் நாளை (29) வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தி) நடைபெறவுள்ளது.
-
சலசலப்பை ஏற்படுத்தியுள்ள கோஹ்லியின் திட்டு!
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய வீரர் விராட் கோஹ்லி கடுமையாக திட்டி வழியனுப்பியது அடிலெய்ட் மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“தவ்ஹீத் ஜமாஅத்தின் ஷிர்க் ஒழிப்பு மாநாடு மத ஒற்றுமைக்கு எதிரானது”
திருச்சி: தமிழ்நாட்டின் திருச்சியில் ஜனவரி 31 ஆம் தேதியன்று மாநில அளவிலான ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ ஒன்றை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.