Author: yourkattankudy.com
-
அமெரிக்காவை உறையவைக்கும் பனி! 18 பேர் பலி!
வாஷிங்டன்: அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பனிப்புயலில் ஒன்றாக கருதப்படும் குளிர்கால பனிப்புயல் தாக்கியதில் கிழக்கு கடற்கரையோரப் பிராந்தியத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்திம்பித்துள்ளது.பயங்கரமான காற்று மற்றும் பனிப்பொழிவுடன் சம்பந்தப்பட்டதாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி மீடியா போரத்தின் 16வது ஊடகவியலாளர்கள் மாநாடு
எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 16வது ஊடகவியலாளர்கள் மாநாடு காத்தான்குடி கடற்கரை ஜூமைறா பெலசில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06.02.2016 அன்று மீடியா போரத்தின் தலைவர் ஏ எல் டீன் பைறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
-
குறுக்கு வழிகள்
தேன்பாணி விற்கிறார் தெருவின் முனையில் அம்பாணி ஆக அவசரம் அதனால் லொத்தரின் பின்னால் பித்தனாய் அலைகிறார் உள்ள உழைப்பையும் மெல்ல இழக்கிறார்.
-
“உருவாகும் பலமான எதிர்க் கட்சியில் மகிந்தவும் இருப்பார்”- கோட்டா
கொழும்பு: முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு உருவாகவுள்ள கட்சியில், மஹிந்த ராஜபக்ச நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
“விடுதலைப் புலிகள் போரில் தோற்றாலும் அவர்களின் சிந்தனை தோற்கவில்லை”- ஜனாதிபதி
கொழும்பு: விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களின் பிரிவினைவாத சிந்தனை, கருத்து ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அரசியலமைப்பு வழியாக நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
-
“காங்கேயனோடை பிர்லியன்ட் சமூக அமைப்பின் சேவைகள் பாராட்டத்தக்கது”- கல்விப்பணிப்பாளர் பதுர்தீன்
முகம்மட் சஜீ காங்கேயனோடை: மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் காங்கயனோடை பிர்லியன்ட் சமூக அமைப்பின் சுமார் 1 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாடசாலையின் ஒரு பகுதி சுற்று மதில் உத்தியோக பூர்வமாக இன்று (22) காலை கையளிக்கப்பட்டது.
-
அமெரிக்காவை நெருங்கும் வரலாறுகாணாத பனிப்புயல்: 5 கோடி மக்கள் பாதிப்படையலாம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை மாபெரும் பனிப்புயல் ஒன்று நெருங்குவதால் தலைநகர் வாஷிங்டனில் ஏறக்குறைய-வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் வீசவிருக்கும் இந்தப் பனிப்புயலின் காரணமாக, சில மணி நேரங்களில் இரண்டடி உயரத்திற்கு பனி பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடிப் பேர் இந்தப் பனிப்புயலின் காரணமாக பாதிக்கப்படுவார்கள்.
-
சிலரின் சீரழிவுகள்
எழுதி எழுதியே இஸ்லாம் வளர்ப்பார் தொழுகையின் சிறப்பை தொடராய் எழுதுவார் பொழுது புலர்ந்தே போர்வையை விலக்கி எழுந்து தொழுவார் இது சரி என்பார் எடுத்ததற்கெல்லாம் இஸ்லாம் பேசுவார் அடுத்தவன் சொத்துக்கு ஆட்டயப் போடுவார் தடுத்த விடயத்தை தனியே செய்வார்
-
தஜிகிஸ்தானில் தாடி வைத்தவர்கள் மீது பொலிசார் மழிப்பு நடவடிக்கை
டுஷான்பி: தஜிகிஸ்தானில் ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும், சுமார் 13,000 ஆண்களின் தாடிகளை தாங்கள் சமீபத்தில் மழித்துவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் அந்நிய தாக்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் நாடளாவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
-
“கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை”- வை.எல்.எஸ். ஹமீட்
கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு சட்டவிரோதமானதென்றும் மற்றும் நியமனங்கள் என்பவற்றை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்றும் அம்மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மனுதாரர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
-
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை அபிவிருத்தி செய்ய பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் நிபுணத்துவக் குழுவினர் விஜயம்
ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தினை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னெடுத்து வருகின்றார். இம்மைதான அபிவிருத்திற்கான திட்ட வரைபடங்களை விளையாட்டுத்துறை அமைச்சின் நிபுணத்துவக் குழுவான சீ.ஈ.சீ.வீ நிறுவன பொறியியலாளர் குழுவினர் தயாரித்துள்ளதுடன் இவ்வரைபடங்களுடன் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் இந்நிபுணத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (19) சென்று பார்வையிட்டுள்ளனர்.