Author: yourkattankudy.com
-
பப்புவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை!
-MJ சிட்னி: இன்றுகாலை பபுவா நியூகினியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.புதன்கிழமை அதிகாலையில் கடலுக்கு அடியில் கிழக்கு பகுதியில் 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.
-
தெற்காசிய நகரங்களுக்கிடையிலான உச்சிமாநாடு 2013: காத்தான்குடி நகரசபை சார்பில் தவிசாளர் அஸ்பர்!
– அப்துல் பாஸித் காத்தான்குடி: தெற்காசிய நகரங்களுக்கிடையிலான உச்சிமாநாடு 2013 கடந்த ஏப்ரல் 17,18 ஆம் திகதிகளில் இந்தியாவின் புது டில்லி நகரில் உள்ள ஹோட்டல் இம்பீரியலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நகர முதல்வர்களும், உள்ளுராட்சி சேவையைச் சேர்ந்த பல அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் எமது காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களும் கலந்து கொண்டார்.
-
பாக்கிரின் நகர்வுகள்…
-AK-77 காத்தான்குடி: நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது மாணவி ஒருவரை காத்தான்குடிக்கு வெளியில் தனது வாகனத்தில் (கார்) அழைத்துச் சென்று, பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காத்தான்குடி நகரசபை ஆளும் கட்சி உறுப்பினரும்,
-
இரு பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பை மையமாகக் கொண்டு வெளிவரும் சுடரொளி மற்றும் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு வெளிவரும் உதயன் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வன்னி மாவட் பாராளுமன்ற உறுப்பினரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன் தீர்மானித்துள்ளதாக இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
-
ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வெளியான 2012 ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை முடிவுகளிற்கமைவாக ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் யூ. அஹமட் லெப்பை தெரிவித்தார்.
-
செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வர் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பதனால் மாத்திரம் முழுமையாக பாடசாலை நிருவாகத்தை குற்றம் கூற முடியாது-சி.சந்திரகாந்தன்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வர் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பதனால் மாத்திரம் முழுமையாக பாடசாலை நிருவாகத்தை குற்றம் கூற முடியாது என முன்னாள் முதலமைச்சரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலை குறித்து முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை
– இர்ஷாட் ரஹ்மதுல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலை குறித்து முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் இன்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதனை இங்கு தருகின்றோம்.
-
இலங்கை அமைச்சர் ஹக்கீமும் வியட்நாமிய பௌத்த பிக்குவும் சந்திப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் வியட்நாம்: தற்பொழுது வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அங்கு வின்ஹ் புங் பிராந்தியத்தில்
-
வேன், ரயில் மோதுண்டு விபத்து! படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் – வெலிகமையில் சம்பவம்
பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகமை: இன்று 23.04.2013 செவ்வாய்க்கிழமை காலை10.40 மணியளவில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் கடுகதி புகையிரதத்துடன் வெளிகமையில் வைத்து வேண் ஒன்று மோதுன்டத்தில் வாகனத்தில்
-
இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பில் சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் – வியட்நாமில் அமைச்சர் ஹக்கீம்
பழுளுல்லாஹ் பர்ஹான் வியட்நாம்: அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கும், வியாட்நாமுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதாகவும் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்புச் செயற்திட்டங்கள்,
-
கொலஸ்ட்ரோல் (Cholesterol) பற்றிய ஆய்வு
தொகுப்பு – அ.மு. அஃப்ஸல் நம் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க நம் உடலே உற்பத்தி செய்யும் பல்வேறு பொருட்களில் ஒன்று தான் இந்த கொலெஸ்ட்ரோல் (Cholestrol). இது வெண்மை நிறத்திலான கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசிமாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் , பித்த நீர், வைட்டமின் D மற்றும் உடலின் பல்வேறு முக்கிய புரதச் சத்துகள் , திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் தேவையானது.
-
முள்ளியாவலை பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிறுப்புக்கள் சில தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் வண்மையான கண்டனத்துக்குரியது: அமைச்சர் றிசாத்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டதின் முள்ளியாவலை பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிறுப்புக்கள் சில தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் வண்மையான கண்டனத்துக்குரியது. இவ்வாறான ஈனச் செயல்களை செய்த எவராக இருந்தாலும் அவர்களின் தராதிரங்களுக்கப்பால் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என பொலீஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.