
பழுளுல்லாஹ் பர்ஹான்
வெலிகமை: இன்று 23.04.2013 செவ்வாய்க்கிழமை காலை10.40 மணியளவில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் கடுகதி புகையிரதத்துடன் வெளிகமையில் வைத்து வேண் ஒன்று மோதுன்டத்தில் வாகனத்தில் பயணித்த பயணிகள் இருவர் உட்பட சாரதியும் பலத்த காயத்திற்குள்ளாகி படுகாயமடைந்து வெலிகம வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிகம – சித்தார்த்த மகாவித்தியாலயத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலே குறித்த வேன் ரயிலுடன் மோதுண்டு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சாரதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் விபத்துக்குரிய காரணம் சாரதியின் கவனக்குறைவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment