பப்புவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை!

papua-new-guinea-flag[1]-MJ

சிட்னி: இன்றுகாலை பபுவா நியூகினியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.புதன்கிழமை அதிகாலையில் கடலுக்கு அடியில் கிழக்கு பகுதியில் 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தெரிவித்துள்ளன.

 

நிலநடுக்கத்தின் போது இத்தீவின் கட்டிடங்கள் அதிர்ந்தன.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ந மக்கள் அச்சத்தால் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். சேத நிலவரம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.இந்த நிலநடுக்கம் காரணமாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.

பப்புவா நியூ கினியாவில் எரிமலைகள் சீற்றத்தோடு அடிக்கடி நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. அவுஸ்திரேலியாவைச் சூழவுள்ள தீவிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment