ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

zainudeen– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: வெளியான 2012 ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை முடிவுகளிற்கமைவாக ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் யூ. அஹமட் லெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது

தேசிய ரீதியில் மட்டக்களப்பு மத்தி முதலாவது இடத்தையும் இரண்டாவது இடத்தை கண்டியும் மூன்றாவது இடத்தை கொழும்பு வலயமும் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முன்னாள் பணிப்பாளர் யூ.ஜெயினுதீனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

நாடளாவிய ரீதியிலுள்ள 97 கல்வி வலயங்களில் தேசிய ரீதியில் 1வது இடத்தை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கருத்துத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 17 கல்வி வலயங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

U.Zainudeen
U.Zainudeen

Published by

Leave a comment