– இர்ஷாத் றஹ்மத்துல்லா
கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டதின் முள்ளியாவலை பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிறுப்புக்கள் சில தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் வண்மையான கண்டனத்துக்குரியது. இவ்வாறான ஈனச் செயல்களை செய்த எவராக இருந்தாலும் அவர்களின் தராதிரங்களுக்கப்பால் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என பொலீஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.
மேலும் அங்கு அவர் தகவல் தருகையில் கூறியதாவது –
முள்ளியாவலையில் தமிழ் மக்களுக்கினது சில குடியிறுப்புக்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்வியுற்றதும்இமுல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் அவர்களை தொடர்பு கொண்டு இந்த சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகைளையும் செய்து கொடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக் காலமாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக இனவாத சக்திகள் தொடராக செயற்பட்டுவருகின்றன. இந்த சம்பவத்துடன் என்னையும், முஸ்லிம் மக்களையும் தொடர்பு படுத்தி சில தமிழ் ஊடகங்கள் தொடராக பிரசாரங்களை செய்துவருகின்றன.
நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது, முல்லி வாய்க்காலில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 3 இலட்சம் தமிழ் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தோன். முல்லி வாய்க்காலிருந்து வந்த தமிழ் மக்கள் உணவின்றி இருந்ததால் பேரீத்தம் பழங்களை கொடுப்பது நல்லது என ஆலோசணை கூறப்பட்ட போது அவர்களது உயிர்களை பாதுகாக்க இவடமாகாண முஸ்லிம்களுக்கு நோன்புக்காக கொண்டுவரப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களை அம்மக்களுக்கு பகிர்ந்தளித்தேன்.
அதே போல் கா.பொ.த.உயர்தரத்தில் கற்ற மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலையிருந்ததால்இசிதறி பல முகாம்களில் இருந்த மாணவர்களை ஒரிடத்திற்கு எடுத்துஇகொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளின் முக்கிய ஆசிரியர்களை வவுனியா மெனிக் பார்முக்கு அழைத்து பாடம் புகட்டினோம்.அதனால் இன்று அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி கற்கை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.என்னை அவர்கள் சந்திக்கு போது அதனை நினைவுபடுத்துகின்றனர்.
அதே போல் மெனிக் பார்மில் இருந்த மக்களை அவர்களது சொந்த பிரதேசத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து குடியேற்றினேன்.முதலில் அந்த தமிழ் மக்களை குடியேற்றினேன்.அப்போது கூட முஸ்லிம்கள் ஒரு இலட்சம் பேர்கள் வரை அகதிகாளகவே இருந்தனர். நான் எந்த வேளையிலும் இன ரீதியாக சிந்தித்து செயற்பட்டதில்லை.அதற்கு போதுமான மக்கள் சான்றுகள் இருக்கின்றன.இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு யுஎன்எச.சீஆர் மூலம் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தேன்.வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வாழ்வாதார கொடுப்பனவுகளும் பெற்றுக் கொடுத்தேன்.ஆனால் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இடம் பெறுகின்ற போது, இந்த நிறுவனங்கள் தமது உதவி திட்டங்களை நிறுத்திக் கொண்டன.
எவருக்கும் எந்த பாவமும் செய்யாத முஸ்லிம்கள் என்ற படியாலேயே தமது மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இவ்வாறு பல்வேறு இழப்புக்களை சந்தித்த நலிவடைந்த ஒரு சமூகம் தன்னுடைய தாயகத்தில் மீள்குடியேற வருகின்றபோது பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் இஅவர்களை நசுக்கும் வேலைகளை செய்வது என்ன நியாயம் என்று நான் கேட்கின்றேன்.சில ஊடகங்களும், ஆயுத இயக்கங்களில் இருந்து வந்த சில அரசியல்வாதிகளும்.இதற்கு ஆதரவாக செயற்படுவதை நாமறிவோம்.இவர்கள் மீண்டும் இந்த பிரதேசத்தில் அச்ச நிலையினை தோற்றுவிக்கவே முனைகின்றனர்.தாங்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்வதற்கான உரிமையினையே இந்த முஸ்லிம்கள் கோறி நிற்கின்றனர்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினால் கண்டறியப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடை முறைப்படுத்துமாறு சர்வதேசம் எங்கும் சென்று கூறும் தமிழ் தலைமைகள் இஇதனை நடை முறைப்படுத்த அரசு முனையும் போது அதற்கெதிராக விஷமப் பிரசாரங்களை கூறிவருகின்றனர்.அறிக்கையின் பரிந்துரையில் 9-113 வது அத்தியாயத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு தேவையான இருப்பிடம்இகாணி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதனை நடை முறைப்படுத்தும் பொருப்பு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்இமற்றும் ஜனாதிபதி விசேட செயலணி என்பனவற்றுக்கு உள்ளது என கோடிட்டு காட்டியுள்ளன.
அப்படியான ஒரு நிலையில் மீள்குடியேற்ற செயலணி ஏனைய அனைத்து அரச திணைக்களங்களின் பிரதி நிதிகள் இமாவட்ட அரசாங்க அதிபர்இபிரதேச செயலாளர் கொண்ட குழுவை ஏற்படுத்தி இந்த காணி விடயத்தை உரிய முறையில் கையாண்டுள்ளது.இந்த காணி வழங்களுக்கும் எனக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
குறிப்பாக வடக்கில் வாழும் அனைத்து சமூகங்களும் சகோதர உறவுடன் வாழ வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.எந்த சமூகத்திற்கும் அநியாயம் இழைக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்திவந்துள்ளேன்.ஆனால் இன்று எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் சில பிழையான கருத்துக்கள் இனங்களுக்கிடையில் உறவில் விரிசலை எற்படுத்தும் சக்திகளால் செய்யப்படுகின்றது என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் மீண்டும் இம்மாவட்டத்தில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முனையும் சக்திகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்இஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்
Leave a comment