Author: yourkattankudy.com
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது- கட்சியின் அதி உயர் பீட கூட்டத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம்!!
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: வடமாகாணத்தில் சமுர்தி உத்தியோகஸ்தர்கள் நியமனத்திலும், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அந்த மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான வளப்பங்கீடு போன்ற விவகாரங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் அதிஉயர் பீட கூட்டத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு மும் மொழியிலும் புதிய பெயர் பலகைகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு புதிய பெயர் பலகைகள் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிராதான நுழைவாயில் இரண்டில் புதிய பெயர் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
-
காத்தான்குடி-1, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் புணரமைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் 03-08-1990 வெள்ளிக்கிழமை அன்று இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாசிஸ புலிகளினால் கொடூரமாக கொல்லபட்ட சம்பவம் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஒரு மறக்க முடியாத துக்க சம்பவமாக பதிந்துள்ளது.
-
பிரான்ஸ் தூதுவர் – த.தே.கூ. பா.உ யோகேஸ்வரன் எம்பி சந்திப்பு! மட்டு-பாதுகாப்பு நிலை குறித்தும் கலந்துரையாடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பகல் நடைபெற்றது.
-
கிண்ணியா நகரசபை எல்லைக்குள் காணப்படும் வீதிகளை சட்டபூர்வமாக பதிவு செய்ய நகரபிதா ஹில்மி நடவடிக்கை
– அஹ்ராஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குள் காணப்படும் வீதிகள், சிறுவீதிகள், நகரசபைக்குள் உள்வாங்கப்படாத வீதிகளை உள்வாங்கி புதிய வீதிகளுக்கு பெயர்களும் வைக்கப்பட்டு சட்டபூர்வமாக பதிவு செய்து வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கையினை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி மேற்கொண்டு வருகின்றார். இது சம்பந்தமான கூட்டம் நகரபிதா தலைமையில் இன்று (03.06.2013) 9.00 மணியளவில் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
-
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பலஸ்தீன் பயணம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று திங்கள் கிழமை (03) அதிகாலையில் பலஸ்தீனத்திற்கு பயணமானார்.
-
பெண்கள் பாடசாலைகளில் இனிமேல் ஆசிரியைகள் மாத்திரமே: தமிழக அரசு உத்தரவு!
– OIT சென்னை: மாணவிகள் பாலியல் பிரச்சினைக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், இனிமேல் பெண்கள் பள்ளிகள் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதலே இது அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
-
குவைத்தில் 8ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 8ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்! மவ்லானா வேலூர் அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் சிறப்புரை!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
-
உனக்கும் எனக்கும் உரசிக் கொள்ளும் உறவு
– மதியன்பன் மறக்க முடியவில்லை உன்னை மனதிலும் மடியிலும் சுமந்திருப்பதால்..
-
2011ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பத்து மாணவர்கள் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பினால் கௌரவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கும் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தில் தொடர் மதிப்பீட்டு பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற 2011ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பத்து மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,அத் திட்டத்தில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் தலைவர் டாக்டர் ஹாதி தலைமையில் இடம்பெற்றது.
-
புலமைப்பரிசில் பரீட்சைக்கு வயது வேறுபாடின்றி தோற்ற அனுமதி
கொழும்பு: அரச பாடசாலை மாணவர்களுக்காக பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களும் வயது வித்தியாசமின்றி தோற்ற அனுமதிக்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம். ஜே. புஸ்பகுமார அறிவித்துள்ளார்.
-
நீர் நிலைகளின் மட்டம் உயர்வு: அண்டிய பிரதேசங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை
கொழும்பு: நாட்டின் பல பிரதேசங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைவதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.