– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கும் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தில் தொடர் மதிப்பீட்டு பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற 2011ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பத்து மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,அத் திட்டத்தில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் தலைவர் டாக்டர் ஹாதி தலைமையில் இடம்பெற்றது.
இங்கு மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்களிப்பு எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் இத்ரீஸ் நளீமியும், மாணவர்களுக்கான சிறந்த உணவுப் பழக்கம் எனும் தலைப்பில் டாக்டர் யூ.எல். நஸீர்டினும் சிறப்புரையாற்றினார்கள்.
இதன் போது 2011ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடைந்த முதல் பத்து மாணவிகளும் அதிதிகளினால் நினைவு சின்னமும், பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் டாக்டர்கள், பொறியியலாளர்கள், பல்கழைக்கழக விரிவுரையாளர்கள், வைத்திய நிபுனர்கள் , பல்கழைக்கழக மாணவர்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
குறித்த ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பு காத்தான்குடியில் பல்வேறுபட்ட கல்வி அபிவிருத்திப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment