புலமைப்பரிசில் பரீட்சைக்கு வயது வேறுபாடின்றி தோற்ற அனுமதி

1052864-Royalty-Free-Vector-Clip-Art-Illustration-Of-School-Kids-Carrying-Flowers-2[1]கொழும்பு: அரச பாடசாலை மாணவர்களுக்காக பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களும் வயது வித்தியாசமின்றி தோற்ற அனுமதிக்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம். ஜே. புஸ்பகுமார அறிவித்துள்ளார்.

இந்நடைமுறை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் இருந்து பின்பற்றப்படுமெனவும் இதற்கமைவாக திருத்தப்பட்ட பரீட்சை பிரமாணக் குறிப்பு சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புதிய பிரமானக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஐந்தாம் தர புலமைப் பரீட்சையின் அடிப்படையில் உதவிப் பணம் வழங்குவதெற்கென பதினொரு வயதுக்கு குறைந்த, பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மாத்திரம் தகைமை பெறுவர். பரீட்சைக்கு தோற்றி 70 புள்ளிகளை பெறும் சகல மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனினும் ‘சித்தி’ என்ற பதம் பயன்படுத்தப் படமாட்டாது.

சில பாடசாலைகளில் மேற்படி பரீட்சைக்கு திறமையான மாணவர்களை மாத்திரம் தோற்ற வைத்து சித்தி வீதத்தை காட்டி பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கிலும் சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்ற வைக்கும் நோக்கிலும் புதிய பிரமான விதிகள் அமுல்படுத் தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

– தினகரன்

Published by

Leave a comment