Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஆப்கானில் இந்தியத் தூதரகம் அருகே தாக்குதல்: 8 பேர் பலி

    காபூல்: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருகே நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். காரில் வந்த மூன்று தற்கொலை தாக்குதல்தாரிகள், தூதரகத்துக்கு அரு கேயுள்ள சோதனைச் சாவடியின் அருகாமையில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

  • நியுஸிலாந்து பால்மாவில் வாத நோய் பாக்டீரியா கலப்படம்!

    லண்டன்: நியுஸிலாந்தின் மிகப் பெரிய பால்மா நிறுவனத்தின் குழந்தைப் பால் மா உள்ளிட்ட பொருட்களில் பாட்டுலிஸம் என்ற நோயைத் தரவல்ல பாக்டீரியா கிருமி கலந்திருக்கலாம் என அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது. பாட்டுலிஸம் என்பது சில நேரம் உயிரிழப்பையும் ஏற்படுத்தவல்ல ஒருவகை வாத நோய். பாதிப்புள்ள பால்மா பொருட்களை கடைகளில் இருந்து உடனடியாக திரும்பப் பெற சீனா உத்தரவிட்டுள்ளது.

  • ‘எமது அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எனது காவி உடையை களற்றி எறியத் தயார்’

    மஹியங்கனை: இலங்கையில் உள்ள முஸ்லிம் ஒருவரையோ, முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தையோ, முஸ்லிம் பள்ளிவாசலையோ பொதுபல சேனா அமைப்பினர் தாக்கினர் என்று நிரூபித்தால் தான் அணிந்திருக்கும் காவி உடையை கழற்றி எறியத் தயாராக இருப்பதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

  • க.பொ.த உயர்தர பரீட்சைகள் திங்கட்கிழமை ஆரம்பம்

    கொழும்பு: க. பொ. த உயர்தர பரீட்சைகள்  5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்ப மாகிறது. பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டள்ளார். பரீட்சைகள் காலை 8.30 க்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 க்கும் இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும்.

  • நோன்புப் பெருநாளை தீர்மானிக்கும் மாநாடு

    கொழும்பு: நோன்புப் பெருநாளைத் தீர்மானிப்பதற்கா ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மகாநாடு எதிர்வரும் 07 ஆம் திகதி புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.

  • மக்காவில் பெய்த மழை

    -MJ ஜித்தா: நேற்றிரவு (வியாழக்கிழமை) மக்காவில் மழை பெய்தது. நீண்ட உஷ்ணம், வரட்சியின் பின்னர் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புனித ரமழானில் வெள்ளி இரவு தறாவீஹ் தொழுகையில் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிக்கு வெளியில் தொழுதவர்கள் மழையிலும் தொழுகையை மேற்கொண்டிருந்தனர்.

  • ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்

    -MJ டுபாய்: இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத்தொடர் எதிர்வரும்  ஜனவரி  மாதத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெவுள்ளது. 2009 ம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடக்கவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு எமிரேட்சில்   போட்டிகளை நடத்தி வருகிறது.

  • 1990 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயல் தாக்குதலில் ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் முஸ்லிகள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால் கொடுரமாக கொல்லபட்டு

  • PMGGயின் ஏற்பாட்டில் காங்கேயனோடையில் இப்தார் நிகழ்வு

    – PMGG ஊடகப் பிரிவு: காங்கேயனோடை: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,  புனித ரமழானை சிறப்பிக்கும் முகமாக காங்கேயனோடை பிரதேசத்தில் விஷேட இப்தார் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. காங்கேயனோடை மஸ்ஜிதுல் பத்ர் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள், புத்திஜீவிகள், மாணவர்கள்,

  • புதிய காதி நீதிபதி பதவியேற்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு புதிய காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மௌலவி எஸ்.எம்.அலியார் கடந்த  வியாழக்கிழமை (02-08-2013) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து நீதிபதி எம். றியாழ் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தனது காதி நீதிபதி பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

  • சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜே.பி தலைமையில் நடைபெற்றது.

  • ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!

    -MJ இன்றைய நாள் 03-08-2013. இதே போன்றுதான் அன்றும் ஓர் வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் படைத்தவனை வணங்குவதற்காக மாத்திரம் மக்கள் ஒன்று சேரும் இரு ஆயலங்களுக்குள் உதிரங்கள் வடிந்தோடின. அவை இரத்தக் கறைகளாய் முஸ்லிம்களின் உள்ளங்களில் உறைந்தன.

←Previous Page
1 … 995 996 997 998 999 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar