காத்தான்குடி: காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜே.பி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ‘சமூக சேவைக்கு இளைஞர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு’ எனும் தலைப்பில் காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அல்ஹாபிழ் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி) விஷேட மார்க்கச் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்,மட்டக்களப்;பு எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள்,ஊர் பிரமுகர்கள்,சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 500க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்வு சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் நிதியுதவியில் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
குறித்த சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் காத்தான்குடியில் சமூகத்தில் பல்வேறு சமூக,சமய,கல்வி,கலாச்சார மற்றும் விளையாட்டு போன்ற விடயங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![DSC08184[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc081841.jpg?w=150&h=112)
![DSC08177[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc081771.jpg?w=780&h=585)
![DSC08181[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc081811.jpg?w=780&h=585)
![DSC08184[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc081841.jpg?w=780&h=585)
![DSC08188[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc081881.jpg?w=780&h=585)
Leave a comment