கொழும்பு: நோன்புப் பெருநாளைத் தீர்மானிப்பதற்கா ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மகாநாடு எதிர்வரும் 07 ஆம் திகதி புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
உலமாக்கள்- கதீப்மார்கள்- ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள்- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா- முஸ்லிம் சமய கலாசார திணைக்களம்- ஸாவியா- தக்கியா- மேமன் ஹனபி பள்ளி வாசல்- ஷரீஆ கவுன்சில் ஆகிய வற்றின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
07.08.2013 புதன் மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 06.29 மணி முதல் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையை பார்க்குமாறும் தலைப்பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது 0115234044- 2432110- 01122390783- 0777366099 ஆகிய தொலைபேசிக ளுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
Leave a comment