புதிய காதி நீதிபதி பதவியேற்பு

aliyar– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு புதிய காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மௌலவி எஸ்.எம்.அலியார் கடந்த  வியாழக்கிழமை (02-08-2013) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து நீதிபதி எம். றியாழ் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தனது காதி நீதிபதி பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும், ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றங்களின் நீதிபதியுமான ஏ.எம்.றியாழ் முன்னிலையில் புதிய காதி நீதிபதி சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

 நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கான புதிய காதிநீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரும், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பிரதி அதிபரும், மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

aliyar

aliyar

???????????????????????????????

Published by

Leave a comment