ஜித்தா: நேற்றிரவு (வியாழக்கிழமை) மக்காவில் மழை பெய்தது. நீண்ட உஷ்ணம், வரட்சியின் பின்னர் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புனித ரமழானில் வெள்ளி இரவு தறாவீஹ் தொழுகையில் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிக்கு வெளியில் தொழுதவர்கள் மழையிலும் தொழுகையை மேற்கொண்டிருந்தனர்.
கடும் மழையின் காரணமாக வீதிகளில் மழை வெள்ளம் நிறைந்து காணப்பட்டதுடன் வாகன நெரிசல்களும் ஏற்பட்டன.
மக்கா உட்பட தாயிப் நகரிலும் அதன் சூழவுள்ள பிரதேசங்களிலும் இம்மழை பெய்ததாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
![2497113004[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/24971130041.gif?w=150&h=87)
![na07-big[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/na07-big1.jpg?w=220&h=184)
![2497113004[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/24971130041.gif?w=500&h=293)
Leave a comment