ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்

Pakistan-vs-srilanka-2nd-T20-match-410x250[1]-MJ

டுபாய்: இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத்தொடர் எதிர்வரும்  ஜனவரி  மாதத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெவுள்ளது. 2009 ம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடக்கவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு எமிரேட்சில்   போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த சுற்றுத்தொடரில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு சர்வதேச இருபது20  போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதன்படி, பாகிஸ்தான், இலங்கை அணிகள் எதிர்வரும் 11, 13ம் திகதியில் இரண்டு சர்வதேச இருபது20 போட்டியில் மோதுகின்றன.

டுபாய், அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகள் இடம்பெறும். 2011 இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற இலங்கை-பாகிஸ்தான் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment