காத்தான்குடி: இலங்கையில் முஸ்லிகள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால் கொடுரமாக கொல்லபட்டு 23வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக சிறிலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் 1 இலட்சத்து 3000ஆயிரம் ரூபாய் அனுசரனையில் தாக்குதல் நடத்தப்பட்டு ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் சுபைர் ஸி.ஸி. தலைமையில் 03-08-2013 இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது பள்ளிவாயல் தாக்குதலில் ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறிலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டி.எல்.எம். குறைஷ் சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஜி.எம்.றிஸ்வி அந்நிறுவனத்தின் உப செயலாளர் எம்.ஐ.நாஸர் மற்றும் காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் சுபைர் ஸி.ஸி ,அதன் செயலாளர் அனீஸ் அஹமட்,பொருளாளர் அசனார் ,காத்தான்குடி ஹூஸைனியா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் பழீலுர் றஹ்மான் , கா-குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பாஸி பஹ்ஜான்(அப்பாஸி) மற்றும் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment