‘எமது அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எனது காவி உடையை களற்றி எறியத் தயார்’

bothuமஹியங்கனை: இலங்கையில் உள்ள முஸ்லிம் ஒருவரையோ, முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தையோ, முஸ்லிம் பள்ளிவாசலையோ பொதுபல சேனா அமைப்பினர் தாக்கினர் என்று நிரூபித்தால் தான் அணிந்திருக்கும் காவி உடையை கழற்றி எறியத் தயாராக இருப்பதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

மஹியங்கனை நகரில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனாவின் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதாக எமது அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மஹியங்கனை விகாரைக்கு வந்து எனது காவி உடையை கழற்றி எறிவேன்.

40 வருடங்களாக மஹியங்கனை நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.

அவர் உண்மையை மறைத்து, ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறார்.

இப்படியானவர்களை விரட்டி விட்டு, முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேசப்பற்றாளர்களை எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார். jpc

Published by

Leave a comment