Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கலகெதரவில் முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக் காரியாலயம் தலைவர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைப்பு

    – றிஸ்கான் முகம்மட் கண்டி: கண்டி கலகெதரவில் முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக் காரியாலயம் தலைவர் ரவூப் ஹக்கீமினால் நாடா வெட்டித் திறந்துவைக்கப்படுவதையும் அதன் பின் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் தேசிய பணிப்பாளர் A.C. யஹியாகான் மற்றும் அம்ஜாத் முத்தலிப் ஆகியோர்களைக் காணலாம்.

  • குறுநாகல் பிரதேசத்தில் மு.கா.வின் தேர்தல் பிரச்சாரம்

    – ஆசாத் குறுநாகல்: வடமேல் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள இவ்வேளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமுடன் இணைந்து கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் தமது பிரசார நடவடிக்கைகளை குறுநாகல் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

  • பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு

    கம்பஹா: பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் பணிப்புரை யின் பேரில் கம்பஹா மாவட்டத்தில் சுயதொழில் ஈடுபடும் குறைந்த வருமானம் பெறும் 200 பெண்களுக்கு 200 தையல் மெஷின்கள் அன்பளிப்பு ச் செய்யப்பட்டன. “லிய அபிமன் “அமைப்பின் தலைவியான சட்டத்தரணி புஷ்பா ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

  • நவி.பிள்ளையை திருமணம் செய்யப் போவதாக சொல்லவில்லை: மேர்வின் சில்வா

    கொழும்பு: தமது குடும்பத்துக்கும் அமைச்சர் டளஸ் அழகப் பெருமவின் குடும்பத்துக்கும் இடையிலான உறவு குறித்து, டளஸ் அழகப்பெரும மறந்துபோய் விட்டார் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளைக்கு திருமண அழைப்பு விடுக்கப்பட்ட விடயம் தொடர்பில் மேர்வின் சில்வாவின் கருத்தை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கண்டித்திருந்தார்.

  • புரட்சிப்படையினர் வெற்று உடலுடன் முழங்காலிட வைத்து தலையில் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய வீடியோ காட்சியால் பரபரப்பு!

    – OiT டமஸ்கஸ்: சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட ராணுவத்தினரை புரட்சிப்படையினர் வெற்று உடலுடன் முழங்காலிட வைத்து தலையில் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான கொலைகளுக்கு உலகெங்கும் ஒரே மொழிதான் என்பதை இந்த வீடியோ காட்சி உணர்த்துகிறது.

  • நித்தியானந்தா- ரஞ்சிதா ‘அந்தரங்கக் காட்சிகள்’ போலியானவை: மன்னிப்பு கேட்க வேண்டும்

    – OiT சென்னை: நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட தனியார் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சனல் ஒழுங்கு முறை அமைப்பு.

  • குழப்பங்களின் போது ஒரு முஃமின்

    – மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி : (தமிழாக்கம்) நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழப்பம் (பித்னா) நிறைந்த இக்கால கட்டத்தில் கட்டாயம் கடைபிடித்து ஒழுகுவதற்கான சில உபதேசங்கள்: 1.   அல்லாஹ்வின் பக்கம் மீளுதல்: நாம் செய்த பாவங்கள், குற்றச் செயல்கள் காரணமாகவே தவிர இப்படியான குழப்ப நிலைகள் ஏற்படவில்லை. எனவே அவ்வாறான பாவமான, குற்றமான செயல்களில் இருந்து மீண்டு அவனிடம் பிழை பொறுப்பு தேடவேண்டும்.

  • மகனை பாடசாலையில் சேர்க்க தாயை ஹோட்டலுக்கு அழைத்த அதிபர் கைது

    கொழும்பு: மகனை பாடசாலையில் சேர்ப்பதற்கு தாயை ஹோட்டலுக்கு அழைத்த பாடசாலை அதிபர் ஒருவரை லஞ்ச ஊழல் தவிர்ப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொட்டாவை ஆனந்த கல்லூரியின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் ரீதியான லஞ்சமொன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • இந்திய நாவலாசிரியர் சுட்டுக் கொலை

    காபூல்: தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

  • மக்கள் எமக்கு தந்த வாக்குப்பலத்தை கொண்டு அம்மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என்றால் அந்தப்ப பதவியில் இருப்பதில் என்ன பலன்?

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மக்கள் எமக்கு தந்த வாக்குப்பலத்தை கொண்டு அம்மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என்றால் அந்தப்ப பதவியில் இருப்பதில் என்ன பலன் மக்களுக்கு கிடைக்கப் போகின்றது என்று கேள்வியெழுப்பிய வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இம்மாவட்ட மக்களுக்கு எதையும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை என்றும் கூறினார்.

  • ஆணாக இருந்து தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்ட பிரித்தானிய இராணுவப் பெண்ணின் இஸ்லாமிய நுழைவும், அனுபவமும்…

    – MJ லண்டன்: இதுவரை காலமும் துப்பாக்கியுடனும், போர் எண்ணங்களுடனும், குடிபோதையிலும் இருந்து வந்த பிரித்தானிய இராணுவத்தின் ‘றோயல் குலஸ்சயர், பார்க்சயர் மற்றும் வில்சயர் மாநிலங்களுக்கான ரி.ஏ. ரெஜிமெண்ட்டின் பெண் இராணுவ வீரர் லூசி வெலண்டன் Lucy Vellender (28) புனித இஸ்லாத்தை அண்மையில் ஏற்றுக்கொண்டார்.

  • உங்களுக்கு விருப்பமா?

    – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா? தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி.

←Previous Page
1 … 958 959 960 961 962 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar