சென்னை: நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட தனியார் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சனல் ஒழுங்கு முறை அமைப்பு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சனல்.
கடந்தாண்டு மார்ச் 21ஆம் தேதி மீண்டும் இந்தக் காட்சிகளை மற்றொரு நிகழ்ச்சியில் போட்டுக் காட்டியது அந்த தொலைக்காட்சி நிறுவனம். இந்நிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது நடிகை ரஞ்சிதா ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தோடு சம்பந்தப்பட்ட காட்சிகள் உண்மையானவை அல்ல. மார்ஃபிங் செய்யப்பட்டவை எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
இது குறித்து டிவி தன்னாட்சி ஒழுஙு முறை அமைப்பின் முன்பு ஆஜராகி ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார் ரஞ்சிதா.
அவர்கள் நடத்திய விசாரணையில் தற்போது அந்த வீடியோ காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த தனியார் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என டிவி சனல்களுக்கான ஒழுங்கு முறை அமைப்பு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![Ranjitha-complaint1310493856[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/ranjitha-complaint13104938561.jpg?w=150&h=105)
Leave a comment